வேலூர் தேர்தல்: திமுகவின் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள்!

 

வேலூர் தேர்தல்: திமுகவின் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள்!

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் பணியாற்ற தேர்தல் பொறுப்பாளர்களை  திமுக நியமித்துள்ளது

சென்னை:  வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் பணியாற்ற தேர்தல் பொறுப்பாளர்களை  திமுக நியமித்துள்ளது.

ec

வேலூர் தொகுதியில் கட்டுக்கடங்காத பணப்புழக்கம் காரணமாக வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பாக, ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வேலூரில் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. வரும் 18 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும்  19 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் பரிசீலனை செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  வேட்பு மனுக்களை திரும்ப பெற  22 ஆம் தேதி கடைசி நாள் என்றும் வாக்குப் பதிவு முடிந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. 

kathir

அதன்படி வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராகக் கதிர் ஆனந்த் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் பணியாற்ற தேர்தல் பணி பொறுப்பாளர்களாக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் மற்றும் ஆர்.காந்தி, நந்தகுமார், முத்தமிழ்செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

masu

வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 60க்கும் அதிகமானவர்களை பொறுப்பாளர்களாக திமுக நியமித்துள்ளது. அதில் பொன்முடி, ஜெ.அன்பழகன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, செந்தில்பாலாஜி. கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.