விஜயகாந்துக்கு தினம் தினம் சித்திரவதை… வீட்டுக்குள் பிரேமலதாவின் அதிர வைக்கும் கொடுமைகள்..!

 

விஜயகாந்துக்கு தினம் தினம் சித்திரவதை…  வீட்டுக்குள் பிரேமலதாவின் அதிர வைக்கும் கொடுமைகள்..!

பாவம் பேச முடியாதவரை இப்படித் தான் தங்கள் சுயநலத்திற்காக பிரேமலதா கஷ்டப்படுத்துவாரா? எங்க கேப்டனை விட்டுவிடுங்கள்’’ என வேதனைப்படுகின்றனர் விஜயகாந்த் ரசிகர்கள்.

விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் பேசமுடியாத நிலையில் இருந்து வருகிறார். அமெரிக்கா, சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்து வந்த அவரை அரசியல் சுயநலத்திற்காக பாதியிலேயே அழைத்து வந்து விட்டார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன் வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற அவரை அவசர அவசரமாக அழைத்து வந்து விட்டார்கள். vijayakanth

அப்போது முன்பை விட அவரது உடல் நிலை மிகவும் மோசமாகவே இருந்தது. கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த வந்த பாஜகவின் முரளிதர ராவ் விஜயகாந்தின் நிலைமையை பார்த்து கலங்கி இருக்கிறார். அப்போது எல்.கே.சுதீஷிடம் அவர், ‘’விஜயகாந்தின் உடல் நிலையை வைத்து அரசியல் லாபம் தேட முயற்சிக்காதீர்கள். பாவம் அவர். தேர்தலுக்காக அவரது சிகிச்சையை பாதியில் நிறுத்திக் கொண்டு திரும்புவதெல்லாம் பெரும் கொடுமை’’ என வேதனைப்பட்டு இருக்கிறார். 

அடுத்து எழுந்து நடக்கவே முடியாதவரை வடசென்னையில் பிரச்சாரம் செய்ய கிளப்பினார் பிரேமலதா. 10 நிமிடங்கள் கூட பிரச்சாரத்தில் விஜயகாந்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அடுத்து சில வாரங்களில் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துப்போவதாக விஜயகாந்த் குடும்பம் கூறியது. ஆனால் இதுவரை அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடந்ததாகத் தெரியவில்லை. vijayakanth

கடந்த மாதம் 25ம் தேதி அவரது பிறந்த நாளை முன்னிட்டுன்  நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நாற்காலியில் அமர்ந்திருந்த விஜயகாந்த் எழுந்து நிற்க முயற்சிக்கும் போதும் கீழே விழ, அவரை அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் அவரை தாங்கிப் பிடித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தே.மு.தி.க கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்த் பேசுவார் என காத்திருந்த நிலையில் கடைசி வரை விஜயகாந்த் பேசவேயில்லை.vijayakanth

வரும்  15ம் தேதி  திருப்பூரில்  நடக்கப் போகிற தே.மு.தி.க., முப்பெரும் விழாவில் 10 நிமிஷமாவது விஜயகாந்த்தை பேச வைத்து விட வேண்டும் என பிடிவாதமாய் இருக்கிறார் பிரேமலதா. இதற்காக பேசவே முடியாத நிலையில் இருக்கிற விஜயகாந்த்துக்கு வலுக்கட்டாயமாக வீட்டிற்குள்ளேயே ஸ்பெஷல் பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.  திருப்பூர் கூட்டத்தில் விஜயகாந்தின் அரசியல் வாரிசு விஜய பிரபாகரனும் பேச இருக்கிறார். அவரை விஜயகாந்த்  முன்னாடி பேசிக் காட்டி பயிற்சி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். எங்கே மகன் பேசுபதை பார்த்து விஜயகாந்தும் பேசி விடுவாரோ என்கிற நம்பிக்கையில் பிரேமலதா கொடுத்த ஐடியாவம் இது.

சிங்கமென முழங்கியவர் விஜயகாந்த். அவரது பேச்சு அனைவரும் அறிந்தது தான். பாவம் பேச முடியாதவரை இப்படித் தான் தங்கள் சுயநலத்திற்காக பிரேமலதா  கஷ்டப்படுத்துவாரா? எங்க கேப்டனை விட்டுவிடுங்கள்’’ என வேதனைப்படுகின்றனர் விஜயகாந்த் ரசிகர்கள்.