விக்கெட்டாகும் அடுத்த அமைச்சர் பதவி… எடப்பாடியின் அடுத்த டார்கெட்..!

விக்கெட்டாகும் அடுத்த அமைச்சர் பதவி… எடப்பாடியின் அடுத்த டார்கெட்..!

வேலூர் தேர்தல் முடிவில் அதிமுக தலைவர்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் தோல்வி.. தோல்விதான். ஆனால் எடப்பாடியும், ஓ.பி.எஸும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

காரணம் அமித்ஷாவை எப்படி சந்தித்து சமாதானம் சொல்வது என்று  அதிர்ந்து போய் உள்ளனர். இதற்காக ஒட்டுமொத்த வேலூர் மாவட்டத்தையே கட்சியின் உட்கட்டமைப்பு வகையில் நாசப்படுத்தி உள்ள அமைச்சர் வீரமணியை  பதவியை விட்டு தூக்க வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளூர் கட்சிக்காரர்களிடம் இருந்து எழுந்துள்ளது.

 அவர் சசிகலாவின்  ஆளாக இருக்கக்கூடும்.  கூட இருந்தே குழிபறிக்கிறாரா என்ற சந்தேகம் எடப்பாடிக்கு  எழுந்துள்ளது. வீரமணிக்கு பாடம் புகட்டவே பல அதிமுகவினர் சேர்ந்து எதிராக வாக்களித்து ஏ.சி.சண்முகத்தை தோற்கடித்தனர். இனி தன்னை  மாவட்டத்தில் பலம் பொருந்திய அமைச்சராக பந்தா காட்ட முடியாது. ஒன்று பவர் இல்லாத துறைக்கு மாற்றப்படலாம் அல்லது அமைச்சர் பதவியில் இருந்து தூக்கப்படலாம். 

இரண்டு அமைச்சர்கள்… எடப்பாடிக்கு நெருக்கமான கிழக்கு  மாவட்ட செயலாளர்கள் என்று பலரும் சும்மா சுற்றி வந்து அதிகாரம் செய்ததோடு சரி. மற்றபடி பெரிய அளவில் அவர்கள் களப்பணியாற்றவில்லை’’ என்கிறார்கள்.