விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு கொடுக்க 150 கோடி…புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத காவல்துறை..!? வரிந்து கட்டும் வ.கௌதமன்..

 

விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு கொடுக்க 150 கோடி…புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத காவல்துறை..!? வரிந்து கட்டும் வ.கௌதமன்..

அதிமுக 75 கோடியும் திமுக 75 கோடியும் வாக்குக்குக் கையூட்டு தருகிறார்கள்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 21 ஆம் தேதி நடக்கவுள்ளது. இடைத்தேர்தல் களங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் கடந்த 14 ஆம் தேதி அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் வாக்குக்காக மக்களுக்குப் பணம் கொடுப்பதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புகார் அளித்தார்.

complaint

அதற்கு ஆட்சியர் சுப்பிரமணியன் தேர்தல் அறிவித்த பின்பு எந்த பணமும் உள்ளே வர வாய்ப்பில்லை, தேர்தலுக்கு முன்னரே பணம் கொண்டு வரப் பட்டிருந்தால் அதற்கு என்ன செய்ய முடியும் என்று தெரிவித்ததாக வ.கௌதமன் செய்தியாளர்களிடம் கூறினார். 

complaint

அதனையடுத்து, இன்று விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மு.சந்திரசேகருக்கு, ‘அதிமுக 75 கோடியும் திமுக 75 கோடியும் வாக்குக்குக் கையூட்டு தருகிறார்கள், இது குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் தகவல் அளித்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், விக்கிரவாண்டி வேட்பாளருமான வ.கெளதமன் கடிதம் எழுதியுள்ளார்.

Protest

மேலும், வாக்குக்குக் கையூட்டு தந்ததாக முதல்வர்,  துணை முதல்வர், எதிர்க் கட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்து, சாலை மறியல் போராட்டத்தில் வ.கௌதமனும் அவரது கட்சி தொண்டர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.