வருமானம் பார்க்க எந்த எல்லைக்கும் செல்லும் எடப்பாடி அரசு! – டிடிவி தினகரன் தாக்கு

வருமானம் பார்க்க எந்த எல்லைக்கும் செல்லும் எடப்பாடி அரசு! – டிடிவி தினகரன் தாக்கு

வருமானம் பார்க்க எடப்பாடி பழனிசாமி அரசு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் என்பதற்கு சேலம் ஓமலூரில் நடந்த பள்ளி வளாகத்தில் மது டோக்கன் விநியோகிக்கும் நிகழ்வு சாட்சி என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

kamalapuram

சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் காமலாபுரம் என்ற ஊரில் மதுக்கடையில் மது வாங்குவதற்கான டோக்கனை அரசு பள்ளியில் வைத்து வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பொது மக்கள் எதிர்ப்பு காரணமாக பள்ளி வளாகத்தில் டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டது. இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “சேலம் மாவட்டத்தில் காமலாபுரம் என்ற ஊரில், அரசு பள்ளிக்கூடத்தில் வைத்து டாஸ்மாக் மது விற்பதற்கான டோக்கன் வழங்கப்பட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வருமானம் பார்ப்பதற்காக எந்த எல்லைக்கும் பழனிசாமி அரசு செல்லும் என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம்.

கொரோனா நோய் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கும் நேரத்தில் தமிழக அரசின் கவனம் முழுக்க மது விற்பதிலேயே இருப்பதைப் பார்க்கும் போது அடுத்தடுத்து என்னென்ன விபரீதங்களை ஏற்படுத்தப் போகிறார்களோ என்ற பயமும் கவலையும் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.