வயசு பெண்களின் முதுகில் மோடியின் சாதனை… ஜெயலலிதாவையே மிஞ்சிட்டாரு மோடி!
நவராத்திரி விழாவையொட்டி, கல்லூரி மாணவிகள் சிலரைத் தேடிப் பிடித்து அவர்களின் முதுகில் மோடி அரசின் சாதனைகளை ஓவியமாக வரைந்து பப்ளிசிட்டி செய்து வருகிறார்கள் பாஜகவினர்.
தமிழகத்தில் காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற வாகனங்கள், அம்மா வாகனமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பச்சைக் கலரில், ஜெயலலிதா மறைந்து வருஷங்களைக் கடந்த பின்பும் அம்மா உணவகங்கள், ஏழைகளின் பசியாற்றி வருகிறது. இவ்வளவு ஏன்… சென்ற வருஷ நவராத்திரி வரையில், அதிகமாக விற்பனையான கொலு பொம்மை நம்ம முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொம்மை தான்.
கிரிக்கெட்டின் கடவுளாக கொண்டாடப்படுகிற சச்சினின் சாதனையையே முறியடிக்கிற காலத்தில், அரசியல்ல இதெல்லாம் ஒரு சாதனையா என்று பாஜகவினர் கிளம்பிவிட்டார்கள் போல. வடமாநிலத்திலும் நம்மூர் வளர்மதி மாதிரியான ஆட்கள் இருப்பார்கள் போல!
வடமாநிலங்களில் நவராத்திரி பண்டிகையை இந்த பத்து நாட்களுமே வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் நடிகை நமீதாவின் சொந்த ஊரான சூரத்தில் நவராத்திரி விழாவையொட்டி, கல்லூரி மாணவிகள் சிலரைத் தேடிப் பிடித்து அவர்களின் முதுகில் மோடி அரசின் சாதனைகளை ஓவியமாக வரைந்து பப்ளிசிட்டி செய்து வருகிறார்கள் பாஜகவினர்.
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை குறித்தும், சந்திராயன் -2 சாதனையையும், திருத்தப்பட்ட வாகன சட்டம் குறித்தும் விதவிதமாக வயசு பெண்களின் முதுகுகளில் மோடியின் சாதனை சக்கை போடு போடுகிறது.
இவங்களே படமும் வரைவாய்ங்க…. அப்புறம் முதுகைப் பார்த்தாய்ங்கன்னு கேஸூம் போடுவாய்ங்க!