ரூ.5 லட்சம் கொடுத்து அவமானப்படுத்திய அதிமுக அமைச்சர்… வன்மத்தோடு காத்திருக்கும் பாஜக தலைமை..!

 

ரூ.5 லட்சம் கொடுத்து அவமானப்படுத்திய அதிமுக அமைச்சர்… வன்மத்தோடு காத்திருக்கும் பாஜக தலைமை..!

நான் வேண்டாம். நம்ம கட்சி வேண்டாம்’ என்று நினைப்பவர்களின் பணம் மட்டும் நமக்கு வேண்டுமா..? பணத்துக்காகவா அலைகிறோம்… அந்த 5 லகரத்தை வாங்க வேண்டாம்’’ என்று கொதித்து விட்டாராம்.

வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் போல விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் பாஜக தரப்பை தங்கள் பக்கமே வர வேண்டாம் என்று வேட்பாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை சொல்லிவிட்டார்கள். பாஜக தரப்பில் ஸ்டார் வேட்பாளர்கள் பட்டியலில் தர முன்வந்தபோது அதிமுகவினர் நாங்களே பார்த்து கொள்கிறோம் என்று மறுத்துவிட்டதாம். 

pon radha

அதே சமயம் கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக, சமக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் விக்கிரவாண்டியில் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்கள். பிரசார வேலைகளையெல்லாம் விழுப்புரம் அமைச்சரான சி.வி.சண்முகமே பார்த்துக்கொண்டார். இதை தன் கவுரவமாக கருதுவதால் அவர் வைத்ததுதான் விக்கிரவாண்டியில் சட்டமாக இருந்தது.  இருந்தாலும், மரியாதைக்காக பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரத்தில் ஈடுபட அமைச்சர் சிவி.சண்முகத்திடம்  தேதி கேட்டிருக்கிறார். ஆனால் அமைச்சரோ, போலீஸ் அனுமதி, பாதுகாப்பு என லாஜிக் இல்லாத காரணங்களை சொல்லி நிராகரித்துவிட்டார்.

cv shanmugam

பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர் விரும்பும் பாயின்டில் ஏதாவது ஒன்றில் பேசிவிட்டு போகட்டும். நாங்கள் வரமாட்டோம் என சொல்லிட்டாராம். இதனால் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரஷர் அதிகமாகி விட்டது. பிரஸ் மீட்டோடு மூட்டையை கட்டி விட்டார். சி.வி.சண்முகம் அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை.  

பொன்.ராதாகிருஷ்ணனை சமாதானப்படுத்தும் வகையில் பூத் செலவுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதை கேட்டதும் பொன்.ராதாகிருஷ்ணன், ‘’நான் வேண்டாம். நம்ம கட்சி வேண்டாம்’ என்று நினைப்பவர்களின் பணம் மட்டும் நமக்கு வேண்டுமா..? பணத்துக்காகவா அலைகிறோம்… அந்த 5 லகரத்தை வாங்க வேண்டாம்’’ என்று கொதித்து விட்டாராம்.  இதனால் மிரண்டுபோன பாஜக மாவட்ட செயலாளர்  5 லட்சத்தையும் திருப்பி கொடுத்துவிட்டார். நாடாளுமன்ற தேர்தலிலும் இப்படித்தான் நம்மை அவமானப்படுத்திவிட்டதாக கூறி பாஜக தரப்பினர் கொதிக்கின்றனர். 

pon radha

சி.வி.சண்முகத்தின் செயல்பாடு குறித்து, டெல்லி பாஜக தலைவர் வரை கொண்டு சென்றிருக்கிறார்கள்.