மோடியின் 2.0: முதல் 100 நாட்களில் அதிகம் பேசப்பட்ட முக்கிய நிகழ்வுகள்

 

மோடியின் 2.0: முதல் 100 நாட்களில் அதிகம் பேசப்பட்ட முக்கிய நிகழ்வுகள்

தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு இன்றோடு முதல் 100 நாள் ஆட்சியை நிறைவு செய்கிறது. இந்த நாட்களில் மோடி தலைமையிலான அரசு பல்வேறு சரித்திரம் வாய்ந்த சம்பவங்களை அரங்கேற்றி உள்ளது. அதேசமயம் சில விஷயங்கள் மோடி அரசை விமர்சனத்துக்கு உள்ளாகியது.

கடந்த ஆகஸ்ட் 6ம் தேதியன்று காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு நீக்கியது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்தது.

முத்தலாக் தடுப்பு மசோதா

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்தது. பொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

1952ம் ஆண்டுக்கு பிறகு, அதிக செயல்திறனுடன் செயல்பட்ட மக்களவையின் முதல் கூட்டத்தொடர் என்ற பெருமை தற்போதைய 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடருக்கு கிடைத்தது. இந்த கூட்டத்தொடரில் 30க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இருந்தாலும் பெரும்பான்மையான மசோதாக்கள் மிகவும் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டது  என்ற குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டது குறிப்பிட்டதக்கது.

சந்திரயான் 2

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் போன முத்தலாக் மசோதாவை கடந்த ஜூலை மாதம் மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றி சாதனை நிகழ்த்தியது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் 2 கடந்த ஜூலையில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. சந்திரயான்2 விண்கலம் நாளை அதிகாலை 1.55 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது.