மோடி, அமித்ஷாவை தீர்த்துக் கட்ட சோனியா திட்டம்: ராம்தேவ் பேச்சால் அரசியல் கட்சியினரிடையே சலசலப்பு

 

மோடி, அமித்ஷாவை தீர்த்துக் கட்ட சோனியா திட்டம்:  ராம்தேவ் பேச்சால் அரசியல் கட்சியினரிடையே சலசலப்பு

மோடியும் அமித் ஷாவும் பழிவாங்க நினைத்தால் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் எங்கே இருப்பார்கள் என கேள்வி எழுப்பினார் ராம்தேவ்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உயிரோடு இருப்பதை விரும்பவில்லை என பாபா ராம்தேவ் அளித்த பேட்டி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நிகழ்ச்சியில் பேசிய ராம்தேவ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதிகாரத்தில் இருந்த காலத்தில் அப்படி ஒரு மனநிலையில் இருந்ததாக தெரிவித்து புதிய பீதியை கிளப்பி உள்ளார்.

ramdev

மோடியும் அமித் ஷாவும் பழிவாங்க நினைத்தால் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் எங்கே இருப்பார்கள் என கேள்வி எழுப்பினார் ராம்தேவ். அமைச்சர் ஒருவரை முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் சதித் திட்டம் மூலம் சிறையில் தள்ளியதாகவும் அமைச்சரால் தன்னை தொந்தரவு செய்யவோ அல்லது அவமதிக்கவோ முடியுமென சிதம்பரம் ஒருபோதும் நினைத்ததில்லை என்று அவர் கூறினார். அதற்கான பலனை தற்போது .சிதம்பரம் அனுபவித்து வருவதாகவும் பாபா ராம் தெரிவித்துள்ளார்.

ramdev

மோடியை தூக்கிலிட சிதம்பரம் சதித்திட்டம் தீட்டியதாகவும் பாபாராம்தேவி பொது நிகழ்ச்சியில் பேசி உள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி ராஜா உறுதியான ஆதாரங்கள் இருந்தால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாமே தவிர பொது இடங்களில் பாபா ராம்தேவ் இது போல் பேசுவது முறையற்றது என்று கூறியுள்ளார்

2010ம் ஆண்டு உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்தபோது அமித்ஷா குஜராத் போலி எண்கவுண்டர் வழக்கில் கைதானார். தற்போது அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ள நிலையில், முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.