முதல்வர் மீது ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் –  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! 

 

முதல்வர் மீது ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் –  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! 

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை ஸ்டாலின் ஒருவரை தவிர எல்லோரும் பாராட்டுகிறார்கள். முதல்வர் மீது ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல், பொறாமை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தேவைகள் அதிகமாக இருக்கும் போது பொருளாதார மந்தம் வரத்தான் செய்யும்; பொறாமையால் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். மத்திய அரசு ரஷ்யாவுக்கு நிதியுதவி அளிப்பது சம்மந்தமான கேள்விக்கு, வளர்ந்து வரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடு பொருளாதார  நிதியுதவி அளிப்பது என்பது நம் நாட்டிற்கு கிடைத்த பெருமை.

rb

இலங்கை,ரஷ்யா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு பொருளாதார உதவி செய்வது என்பது ஒரு நாட்டின் பிரதமருக்கு அழகு. நம் நாட்டில் இருந்து சென்று தொழில் தொடங்கியவர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் மிக உற்சாகமான வரவேற்பை முதல்வருக்கு அளித்தார்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு தொழில்களை தொடங்க ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். 

சுமார் 8500 கோடி ரூபாய் அளவிற்கும், கிட்டத்தட்ட 40,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய தொழில் முதலீடுகளை முதல்வர் ஈர்த்துள்ளார். இது போன்ற வளர்ச்சிக்கு எடப்பாடி எடுத்துள்ள முயற்சி நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மோடி எடுத்துள்ள முயற்சியும் உதவியும் அனைவராலும் பாராட்டப்படக்கூடியது” என்று கூறினார்.