மீ டூ குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்

 

மீ டூ குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மீ டூ குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

நாகர்கோவில்: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மீ டூ குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டில் துவங்கிய #MeToo எழுச்சியை தொடர்ந்து, உலகம் முழுவதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சக்திவாய்ந்த ஆண்கள், ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். இந்திய சினிமாவிலும், ஸ்ரீ ரெட்டி, தனுஸ்ரீ தத்தா உள்ளிட்ட நடிகைகள், தங்களிடம் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டினர். 

அதேபோல், நூற்றுக்கணக்கான படங்களுக்கு பாடல்கள் எழுதி, 7 முறை தேசிய விருது பெற்றுள்ள பாடலாசிரியர் வைரமுத்துவின் மீதும் #MeToo மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது ஆதாரம் இல்லாமல் சகதியை வீசும் வகையில் மீ டூ மூலம் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்று கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.