மத்திய பிரதேச, ராஜஸ்தான் முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்

 

மத்திய பிரதேச, ராஜஸ்தான் முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.

சென்னை: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் 3 மாநிலங்களை காங்கிரஸ் ஆட்சி பிடித்துள்ளது. 3 மாநிலங்களில் பாஜக தனது ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இதனையடுத்து ராஜஸ்தான் மாநில முதல்வராக க அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அதேபோல் மத்திய பிரதேச மாநில முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் மற்றும் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ஆகியோர்களின் பதவியேற்பு விழா நாளை நடைபெற இருக்கிறது. இருவரின் பதவி ஏற்பு விழாவிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். பின்னர் அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்று அசோக் கெலாட் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கிறார். அதனை முடித்துக்கொண்டு மத்திய பிரதேச மாநிலம் போபால் சென்று கமல்நாத் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கிறார்.