பொங்கல் பரிசில் ரூ.25 கோடி தில்லுமுல்லு… கொடுப்பதற்கு முன்பே இப்படியா..?

 

பொங்கல் பரிசில் ரூ.25 கோடி தில்லுமுல்லு… கொடுப்பதற்கு முன்பே இப்படியா..?

25 கோடி ரூபாயை பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு வழங்கும் திட்டத்தில் இருந்து ஆட்டையை போட்டிருக்கிறார்கள்.

25 கோடி ரூபாயை பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு வழங்கும் திட்டத்தில் இருந்து ஆட்டையை போட்டிருக்கிறார்கள்.

முந்திரி, ஏலக்காய், திராட்சை, கரும்பு, ரூ.1000 ரொக்கப்பணத்தை ரேஷன் கடைகளில் 80 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் 100 சதவீதம் வழங்கியது போன்று கணக்கு காட்டப்பட்டு, மீதமுள்ள பணம், பொருட்களை மண்டல இணை பதிவாளர்கள் எடுத்துக் கொள்வதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த ஆண்டில் மட்டும் 15 கோடிக்கும் அளவாக தமிழகம் முழுவதும் வாங்காத நபர்களின் பணம், கரும்பு மற்றும் பொருட்கள் கொள்முதலில் என பணம் சுருட்டப்பட்டதாகும். இந்த ஆண்டு அதை விட கூடுதலாக 10 அதாவது 25 கோடி அளவுக்கு மக்கள் பணத்தை சுருட்டி இருக்கிறார்களாம். குறிப்பாக, காஞ்சிபுரம் உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்தது. eps

இவர், ஓய்வுபெற்ற முன்னாள் கூட்டுறவு சார் பதிவாளர் ஒருவரை வைத்துக் கொண்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பிரதம கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள் இடம் ரேஷன் கடை எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுக்கு 1 முதல் 2 கோடியளவுக்கு ெகாள்முதலில் கமிஷன் அடிப்பதாகவும் புகார் எழுந்தது. காஞ்சிபுரம் உயர் அதிகாரி மீது, லஞ்ச ஒழிப்பு துறையில் புதிதாக பணியில் அமர்த்தப்படும் ஊழியர்களிடம் ரூ.4 முதல் 5 லட்சம் பெற்றுக்கொண்டார் என்ற புகாரும் உள்ளது. 

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் கூட்டுறவு துறை அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர். அதனால், இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்குவதில் காஞ்சிபுரம் உள்ளிட்ட மற்ற மண்டல இணை பதிவாளர்கள் யாரும் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடாமல் கண்காணிக்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.