பள்ளிக்கூடங்கள் திறந்துள்ளன… ஆனால் அதில் மாணவர்கள் இல்லை – ப. சிதம்பரம் ஆவேசம்! 

பள்ளிக்கூடங்கள் திறந்துள்ளன… ஆனால் அதில் மாணவர்கள் இல்லை – ப. சிதம்பரம் ஆவேசம்! 

ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

பள்ளிக்கூடங்கள் திறந்துள்ளன… ஆனால் அதில் மாணவர்கள் இல்லை – ப. சிதம்பரம் ஆவேசம்! 

ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு முந்தைய நாளில் இருந்து முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது.

பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் காஷ்மீரில் தற்போது அமைதி நிலவுகிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சில இடங்களில் இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று பள்ளிக்கூடங்கள் திறக்கபட்டன. மேலும் காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ப. சிதம்பரம், “; இணையசேவை மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. மெகபூபா முப்தியின் மகள் வீட்டுக்காவலில் உள்ளார். ஏன் என்று கேட்டால் பதிலில்லை. இணைய சேவை முடக்கம், வீட்டுக்காவல் இருந்தும் இயல்பு நிலை திரும்பியதாக கூறுகிறார்கள். என்ன நடக்கிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.