பன்றியும் பூமாதேவியும் கலவி செய்து பிள்ளை பெற்றெடுக்க முடியுமா? ஆ.ராசா ஏற்படுத்திய சர்ச்சை

 

பன்றியும் பூமாதேவியும் கலவி செய்து பிள்ளை பெற்றெடுக்க முடியுமா? ஆ.ராசா ஏற்படுத்திய சர்ச்சை

திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா கிறிஸ்துவர்கள், முஸ்லீம்களுடன் இந்துக்களை ஒப்பிட்டுப்பேசிய வீடியோ இணையங்களி வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும், ரம்ஜான் பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லும் திமுக, தீபாவளிக்கு மட்டும் ஏன் வாழ்த்து சொல்வதில்லை? என்று தொண்டர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ஆ.ராசா சொன்ன பதில் இந்துக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. போன தீபாவளிக்கு ஆ.ராசா பேசிய பேச்சு இந்த தீபாவளியிலும் சர்ச்சை ஆவதற்கு காரணம், தீபாவளி பண்டிகைக்கு ஏன் வாழ்த்து சொல்வதில்லை என்பதற்கு அவர் சொல்லி இருக்கும் விளக்கம்தான்.

பன்றியும் பூமாதேவியும் கலவி செய்து பிள்ளை பெற்றெடுக்க முடியுமா? ஆ.ராசா ஏற்படுத்திய சர்ச்சை

‘’திராவிட இயக்கம் எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லா மதத்திலும் மூட நம்பிக்கைகள் இருப்பதுதான் அதற்கு காரணம். எந்த மதமாக இருந்தாலும் இந்த உலகத்தை கடவுள் படைத்தார் … மனிதனை கடவுள் படைத்தார் என்று சொல்கிறது. ஆனால், அந்த தத்துவம் உண்மை அல்ல என்பது இன்றைக்கு தெரிந்திருக்கிறது. கிறிஸ்துவத்திலும், இஸ்லாத்திலும் மூடநம்பிக்கைகள் இருக்கிறது. அதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், கிறிஸ்துவ மதம் ஒருவரால் முன்மொழியப்பட்டு, அவரால் சொல்லப்பட்ட சித்தாந்தங்கள் சரியோ தவறோ .. ஏசு கிறிஸ்து தோன்றியதற்கு ஆதாரம் இருக்கிறது. அதே போல இஸ்லாம் மதத்தில் முகமது நபி தோன்றியதற்கான ஆதாரம் இருக்கிறது. அவர்கள் சொன்னதற்கெல்லாம் வரலாற்று ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால், அவை உண்மையா? பொய்யா? என்பது பற்றி விமர்சனம் அப்புறம்தான். அவர் பிறந்தநாள் கிறிஸ்துமஸ். இவர் பிறந்தநாள் ரம்ஜான். அதனால் வாழ்த்து சொல்கிறோம். ஆனால், தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்வதில்லை என்று தெரியுமா?’’என்றூ கேட்கும் ராசா,

’’ஏசு கிறிஸ்து இருந்தார். அவர் சில கொள்கைகளை சொன்னார் என்பது உண்மை. சரித்திர நிகழ்வு. அந்த மார்க்கத்தை பின்பற்றுவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்வது மனித நேயம். இஸ்லாம் ஒருவர் தோன்றி அவர் சொன்னதை பாலோவ் செய்யச்சொன்னார். ஆனால், அதை பாலோவ் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பெண்கள் பர்தா போடவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால், அவர் ஒரு நெற்யைச்சொன்னா. அதைப்பின்பற்றி ஒரு சமூகம் இருக்கிறது. அதனால் அவர்களூக்கு வாழ்த்து சொல்கிறோம்.

தீபாவளிக்கு எப்படி வாழ்த்து சொல்ல முடியும்?’’என்று கேட்டு, ‘’ தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்தபோது, பத்மாசூரன் இந்த பூமியை பாயாக சுருட்டினான் என்று சொல்கிறார்கள். பூமியை பாயாக சுருட்ட முடியுமா? உலகம் உருண்டைதானே? அப்படி இருக்கையில் எப்படி பாயாக சுருட்ட முடியும்?

பன்றியும் பூமாதேவியும் கலவி செய்து பிள்ளை பெற்றெடுக்க முடியுமா? ஆ.ராசா ஏற்படுத்திய சர்ச்சை

உலகம் உருண்டை என்று 14.2.1600ல் புருனோ சொன்னான். புருனோ சொன்னபோது கிறிஸ்துவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன் என்றால் உலகம் உருண்டை என்று பைபிளில் இல்லை. உலகம் தட்டையானது என்றுதான் இருக்கிறது. பைபிளுக்கு எதிராக பேசியதால் புருனோவை கிறிஸ்துவ மதம் உயிரோடு எரித்துக்கொளுத்தியது. ஆனால் 400 ஆண்டுகளுக்கு பிறகு 2 ஆயிரமாவது ஆண்டில் அதே பிப்ரவரி 14ம் தேதியில் புருனோவை எரித்த இடத்தில் அவருக்கு சிலை வைத்தார்கள். சிலை வைத்துவிட்டு, நாங்கள் செய்தது தவறுதான். உலக மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் என்றூ இரண்டாம் போப் சொன்னார். அறிவியலுக்கு எதிராக இருந்தாலும் பைபிளை திருத்த முயல்கிறார்கள் கிறிஸ்துவர்கள்.

உலகத்தை பாயாக சுருட்டிய பத்மாசுரன் சமுத்திரத்தில் கொண்டுபோய் ஒளித்து வைத்துக்கொண்டான். உடனே பூமாதேவியை காணோம் என்றூ தேவர்கள் எல்லோரும் முறையிட்டார்கள். இதனால் கிருஷ்ணர் பன்றி உருவம் எடுத்து கடலுக்குள் சென்று பூமாதேவியை மீட்கிறார். அப்படி மீட்கிறபோது பூமாதேவிக்கும் பன்றிக்கும் ஒரு காதல் வருகிறது. அவர்கள் இருவரும் இணைந்து ஒரு பிள்ளையை பெற்றெடுக்கிறார்கள். அந்த பிள்ளைதான் நரகாசூரன். அந்த நரகாசூரன் தேவர்களுக்கு எதிராக இருந்தான்., இதனால் வதம் செய்து நரகாசூரனை எரித்தார்கள். இதுதான் தீபாவளியின் கதை.

பன்றியும் பூமாதேவியும் கலவி செய்து பிள்ளை பெற்றெடுக்க முடியுமா? ஆ.ராசா ஏற்படுத்திய சர்ச்சை

உலகத்தை பாயாக சுருட்ட முடியுமா? பன்றி அவதாரம் எடுக்க முடியுமா? பன்றியும் பூமாதேவியும் கலவி செய்து பிள்ளை பெற்றெடுக்க முடியுமா? இப்படி அறிவியலுக்கு எதிராக இருப்பதால்தான் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை.’’என்று தெரிவித்திருக்கும் விளக்கத்திற்கு எதிராக இந்துக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

கிறிஸ்துவர்களையும், முஸ்லீம்களையும் உயர்த்தி பேசி இந்துக்களை தாழ்த்தி பேசியதாக ராசாவுக்கு எதிராக கண்டணங்கள் வலுத்து வருகின்றன.