நோய்ப்பரவல் இல்லை – நிம்மதி; 5 சிறுவர்களுக்கு நோய்த் தொற்று – கவலை! – ராமதாஸ் ட்வீட்

நோய்ப்பரவல் இல்லை – நிம்மதி; 5 சிறுவர்களுக்கு நோய்த் தொற்று – கவலை! – ராமதாஸ் ட்வீட்

இந்தியாவில் கொரோனா பரிசோதனை 30 மடங்கு அதிகரிக்கப்பட்ட நிலையில் நோய்ப்பரவல் விகிதம் அதிகரிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது நிம்மதியளிக்கிறது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அதே நேரத்தில் ஐந்து சிறுவர்களுக்கு கொரோனா உறுதியாகி இருப்பது கவலை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

corona-died-tamilnadu-78

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றை கண்டறிய பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நோய்ப்பரவல் வேகம் அதிகம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
“இந்தியாவில் கொரோனா சோதனை 30 மடங்கு அதிகரிக்கப்பட்டாலும் கூட, நோய்ப்பரவல் விகிதம் அதிகரிக்கவில்லை; கட்டுக்குள் தான் இருக்கிறது. கொரோனா விரைவில் ஒழிக்கப்படும் என்பதை இது காட்டுவதாக மத்திய அரசு கூறியிருப்பது நிம்மதியளிக்கிறது. இதற்கு காரணம் ஊரடங்கு தான். அதை உறுதியாக கடைபிடிப்போம்!” என்று கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில், “சென்னையில் 4 பேர் உட்பட தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 5 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. இது நிச்சயமாக அவர்களின் தவறு அல்ல. குடும்பத்தினரிடமிருந்து தான் தொற்றியிருக்க வேண்டும். பெரியவர்கள் கவனமாக இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.