நீங்க மட்டும் மத்திய அரசின் அனுமதி பெறாமல் பாங்காக் சென்றீர்களே ஸ்டாலின் அண்ணே! : கராத்தே தியாகராஜன் பரபரப்பு அறிக்கை!

 

நீங்க மட்டும் மத்திய அரசின் அனுமதி பெறாமல் பாங்காக்  சென்றீர்களே ஸ்டாலின் அண்ணே! : கராத்தே தியாகராஜன் பரபரப்பு அறிக்கை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்  வெளிநாடு பயணத்தை  விமர்சித்த ஸ்டாலினின்  தாய்லாந்து பயணம் குறித்து   கராத்தே தியாகராஜன் விமர்சித்துள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்  வெளிநாடு பயணத்தை  விமர்சித்த ஸ்டாலினின்  தாய்லாந்து பயணம் குறித்து   கராத்தே தியாகராஜன் விமர்சித்துள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வதில் உள்ள மர்மம் என்ன? அது குறித்து விளக்கமளிக்காமல் என்னை விமர்சிக்கிறார் என்றார். 

stalin

இதுகுறித்து உடனடியாக அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், ‘முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை, உண்மையான காரணங்களைக் கூற வேண்டும். நான் வெளிப்படையாகவே வெளிநாடு பயணம் செல்கிறேன். குடும்பத்தினருடன் நான் செல்லும் பயணங்களை அரசுடன் ஒப்பிடுவதா? திசை திருப்பும் முயற்சியில் தினை அளவு நன்மையும் விளையாது. வெளிப்படையாக நான் செல்லும் பயணங்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கிறார் முதல்வர். இந்த ஒப்பீடு ஒரு முதல்வருக்கு அழகல்ல. ஒப்பீடும் முறையானது இல்லை. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியும் முதலீடு கிடைக்காமல் தத்தளித்து தனிமரமாக நிற்கிறது தமிழகம். தமிழக மக்களிடையே பரவியிருக்கும் சந்தேகங்களுக்கு நேர்மையாக விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று பதிலடி
 கொடுத்தார்.

karate

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நிர்வாகி கராத்தே தியாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழக முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விகள் அதனைத் தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு கடந்தகால நிகழ்வை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அண்ணன் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது 2007 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதியன்று தனது நண்பருடன் தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றது, விமானம் ஏறும்போது தான் முதலமைச்சராக இருந்தார் தலைவர் டாக்டர். கலைஞர் அவர்களுக்குத் தெரியும். மேலும் அந்த பயணம் மத்திய அரசின் அனுமதி பெறாமல் சென்றார் என்று அப்போது சர்ச்சைகள் எழுந்தன என்பதை நினைவூட்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

thiyagarajan

கூட்டணி கட்சிகளாக இருக்கக்கூடிய திமுக- காங்கிரஸ் கட்சிகளுள் பிளவு ஏற்படுவது போல பேசியதால் கராத்தே தியாகராஜனை கட்சி தலைமை தற்காலிகமாக நீக்கியது. அதைத் தொடர்ந்து அவர் தொடர்ந்து திமுகவும் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.