நான் மகானும் அல்ல: எடப்பாடி புனிதரும் அல்ல: டிடிவி தினகரன் விமர்சனம்!

 

நான் மகானும் அல்ல: எடப்பாடி புனிதரும் அல்ல: டிடிவி  தினகரன் விமர்சனம்!

தான் மகானும் அல்ல, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புனிதரும் அல்ல என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

கரூர்: தான் மகானும் அல்ல, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புனிதரும் அல்ல என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு தினகரன் அணியினருக்குப் பாதகமாகவும், எடப்பாடி அணியினருக்குச் சாதகமாகவும் மாறியுள்ள நிலையில், 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலைச் சந்திக்க தயார் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். முன்னதாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற உறுப்பினர்களுக்கு இபிஎஸ்- ஓபிஎஸிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ‘நான்  மகானும் அல்ல, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புனிதரும் அல்ல.  சிபிஐ விசாரணையைக் கண்டு முதலமைச்சர் பயந்து இருக்கிறார். தோல்வி பயம் காரணமாகவே, 18 பேரையும் ஓபிஸ் – இபிஎஸ் மீண்டும் அழைத்துள்ளார். தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்களுடன் தான் இருக்கிறார்கள். 18எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்வதா என்பது குறித்து 3  நாள்களில் தெளிவாக தெரிவிப்போம் ‘ என்று கூறியுள்ளார்.