நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்: திருமாவளவன் அதிரடி

 

நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்: திருமாவளவன் அதிரடி

நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை: நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மதிமுகவும், விசிகவும் இப்போது வரை எங்கள் கூட்டணியில் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் கூறியதால் திமுக – மதிமுக -விசிக உறவில் சலசலப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து விசிக தலைவர் திருமாவளவன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து இருவரும் விவாதித்ததாகவும், எங்களுடன்தான் நீங்கள் இருக்கிறீர்கள் என ஸ்டாலின் திருமாவிடம் கூறியதாகவும், அறிவாலய வட்டாரங்களும், விசிக வட்டாரங்களும் கூறி வருகின்றனர். 

இதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதற்கிடையே மதிமுக நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்ததால் திமுக – மதிமுக இடையேயான உறவிலும் சிக்கல் இல்லை என கூறப்படுகிறது. இந்த உறவு கூட்டணியை நோக்கி நகரும் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை ஒருங்கிணைக்கவே 7 பேர் விடுதலையை வலியுறுத்தி மதிமுக நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே நாங்கள் ஒருங்கிணைந்துதான் இருக்கிறோம். காவிரி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் ஒருங்கிணைந்து போராடி வருகிறோம்.

நாங்கள் ஒருங்கிணையக்கூடாது என நினைப்பவர்கள் வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். எங்கள் கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை. நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்றார்.