தி.மு.க வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு விருந்து… உற்சாக மூடில் ஸ்டாலின்!

தி.மு.க வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு விருந்து… உற்சாக மூடில் ஸ்டாலின்!

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல் கட்சியாக தேர்வானது. தி.மு.க வெற்றியைத் தடுத்து நிறுத்த பல முயற்சிகள் செய்யப்பட்டன. வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி, வெற்றி பெற்றவர் பெயர் மாற்றி அறிவிக்கப்பட்டது, தேர்தல் முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்தது என்ற பல முறைகேடுகளை அ.தி.மு.க செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மக்கள் ஆதரவைப் பெற்றும் வெற்றி பெற முடியாமல் போடப்பட்ட முட்டுக்கட்டைகளை எதிர்த்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையர், நீதிமன்றம் என்று நிறைய போராட்டங்களை மேற்கொண்டார். இதனால், எல்லா தொகுதிகளிலும் என்று இல்லாவிட்டாலும் சில இடங்களிலாவது தி.மு.க வெற்றி உறுதி செய்யப்பட்டது.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வெற்றிக்காக தேர்தல் ஆணையத்தில் போராடிய வழக்கறிஞர்களுக்கு விருந்து அளிக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல் கட்சியாக தேர்வானது. தி.மு.க வெற்றியைத் தடுத்து நிறுத்த பல முயற்சிகள் செய்யப்பட்டன. வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி, வெற்றி பெற்றவர் பெயர் மாற்றி அறிவிக்கப்பட்டது, தேர்தல் முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்தது என்ற பல முறைகேடுகளை அ.தி.மு.க செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மக்கள் ஆதரவைப் பெற்றும் வெற்றி பெற முடியாமல் போடப்பட்ட முட்டுக்கட்டைகளை எதிர்த்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையர், நீதிமன்றம் என்று நிறைய போராட்டங்களை மேற்கொண்டார். இதனால், எல்லா தொகுதிகளிலும் என்று இல்லாவிட்டாலும் சில இடங்களிலாவது தி.மு.க வெற்றி உறுதி செய்யப்பட்டது.

dmk-candidate

இந்த வெற்றியில் தி.மு.க நிர்வாகிகளுக்கு இணையாக தி.மு.க வழக்கறிஞர் அணியினரும் போராடினார்கள். வேட்பாளர் விண்ணப்பம் தொடங்கி, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என்று எல்லாவற்றிலும் வழக்கறிஞர் அணி உடன் இருந்து உழைத்தது. வழக்கறிஞர்களின் சட்டப் போராட்டம் காரணமாக பறிபோக இருந்த பதவிகள் தி.மு.க-வுக்கு மீண்டும் கிடைத்தது. மக்கள் ஆதரவு, நிர்வாகிகள் வேலை இவ்வளவையும் தாண்டி வழக்கறிஞர்கள் துணை இல்லாவிட்டால் இவ்வளவு வெற்றி பெற்றிருக்க முடியாது என்று ஸ்டாலின் உறுதியாக நம்புகிறாராம். இதனால், உள்ளாட்சித் தேர்தலில் உழைத்த வழக்கறிஞர்களுக்கு விருந்து அளித்து கௌரவிக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் என்று தி.மு.க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

stalin

கவுன்சிலர் தேர்வில் அதிக இடங்களில் வெற்றி பெற்றும் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் அ.தி.மு.க முதலிடம் பெற்றுவிட்டது பெரிய விஷயம் என்று நடுநிலையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நேரத்தில், அது தி.மு.க-வை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று கூறுகின்றனர். ஆளும் கட்சியின் அதிகாரம், பணபலம் உள்ளிட்ட அனைத்தையும் மீறி 40 சதவிகிதத்துக்கும் மேலான இடங்களில் வெற்றி பெற்றதே பெரிய விஷயம் என்று ஸ்டாலின் கருதுகிறார் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.