தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மத்திய அரசுக்கு அதிமுக எம்.பி சாபம்

 

தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மத்திய அரசுக்கு அதிமுக எம்.பி சாபம்

முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றினால் இறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என அதிமுக எம்.பி அன்வர் ராஜா பேசியுள்ளார்.

டெல்லி: முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றினால் இறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என அதிமுக எம்.பி அன்வர் ராஜா பேசியுள்ளார்.

முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் மசோதாவை அவசர சட்டமாக நிறைவேற்ற குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கினார். இதற்கு நாடாளுமன்றத்தில் 6 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒப்புதல் வாங்க வேண்டும்.இதனையடுத்து, நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக ஒரு புதிய மசோதாவை சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிமுகம் செய்தார். 

அதைத்தொடர்ந்து மக்களவையில் பேசிய எம்.பி அன்வர் ராஜா, முத்தலாக் மசோதாவை இதே நிலையில் நிறைவேற்ற ஒப்புதல் வழங்க முடியாது .முத்தலாக் சட்டம் என்பது, இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல, இறைவனுக்கே எதிரானது. முத்தலாக் சட்டம் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது. மத்திய அரசு முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றினால் இறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றார்.