சசிகலாவுக்கு இப்படியொரு நிலைமையா..? கண்டுகொள்ளாத டி.டி.வி ஆதரவாளர்கள்..!

 

சசிகலாவுக்கு இப்படியொரு நிலைமையா..? கண்டுகொள்ளாத டி.டி.வி ஆதரவாளர்கள்..!

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, கடந்த 18ம் தேதி பிறந்த நாள் வந்தது. கடந்த ஆண்டு அவரது பிறந்த நாளை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கோலாகலமாக கொண்டாடி தீர்த்தனர்

சசிகலாவுக்கு இப்படியொரு நிலைமையா..? கண்டுகொள்ளாத டி.டி.வி ஆதரவாளர்கள்..!

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, கடந்த 18ம் தேதி பிறந்த நாள் வந்தது. கடந்த ஆண்டு அவரது பிறந்த நாளை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கோலாகலமாக கொண்டாடி தீர்த்தனர். ”சமூக வலைதளங்களில், சசிகலாவின் படத்தை போட்டு, வாழ்த்து செய்திகளை பரப்பினார்கள். இந்த முறை அப்படியே உல்டா. அ.ம.மு.க., முக்கிய நிர்வாகிகள் கூட, சசிகலா பிறந்தநாளை மறந்து விட்டார்கள். 

தேர்தல் படுதோல்வி தான் இதற்கு காரணம் எனக் கூறுகிறார்கள். ஆனால், ஒரு சிலரோ சில பகுதிகளில் சசிகலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டி இருந்தனர். இது அவர் இன்னும் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடவில்லை. விரைவில் வருவேன் என்று சொல்வதை போல அதிமுகவுக்கு கொடுக்கும் மறைமுக எச்சரிக்கை இது என்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பேசிக் கொள்கிறார்கள்.