காஷ்மீர் விவகாரத்தில் தலையீடு… ஐ.நா கோரிக்கையை நிராகரித்த இந்தியா!

 

காஷ்மீர் விவகாரத்தில் தலையீடு… ஐ.நா கோரிக்கையை நிராகரித்த இந்தியா!

இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறுகையில், “காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. சட்ட விரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும் என்பதில் ஐ.நா கவனம் செலுத்த வேண்டும். 

காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா சபையின் மத்தியஸ்த கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் கவனம் செலுத்தும்படி இந்தியா காட்டமாக பதில் அளித்துள்ளது.
பாகிஸ்தான் சென்றிருந்த ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டர்ஸ், இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்தால் மத்தியஸ்தம் செய்து வைக்க ஐ.நா தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். 

j-and-k

இதற்கு இந்தியா பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறுகையில், “காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. சட்ட விரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும் என்பதில் ஐ.நா கவனம் செலுத்த வேண்டும். 

jk-valley

இந்த பிரச்சினையில் இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்தும். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு எந்த தேவையும் இல்லை. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் இந்திய மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் மனித உரிமை மீறல்களையும் தடுக்க பாகிஸ்தான் அரசிடம் ஐ.நா பொதுச் செயலாளர் அறிவுறுத்துவார் என்று நம்புகிறோம்” என்றார்.