காந்தி உங்களுக்கு ட்ரெய்லர்தான்… ஆனால் எங்களுக்கு அவர்தான் வாழ்க்கை! – நாடாளுமன்றத்தில் பொங்கிய மோடி

காந்தி உங்களுக்கு ட்ரெய்லர்தான்… ஆனால் எங்களுக்கு அவர்தான் வாழ்க்கை! – நாடாளுமன்றத்தில் பொங்கிய மோடி

பா.ஜ.க எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த்குமார் ஹெக்டே காந்தியைப் பற்றி தவறாக பேசியது தொடர்பான நாடாளுமன்றத்தில் அமளி நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், காந்தி உங்களுக்கு ட்ரெய்லர் போல… ஆனால், அவர் தான் எங்களுக்கு வாழ்க்கை என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

hegde

காந்தியின் சுதந்திர போராட்ட வரலாற்றை தீவிர வலதுசாரிகள் ஏற்பது இல்லை. இதனால்தான் காந்தியை கொலை செய்த கோட்சே நல்லவர் என்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி சாத்வி பிரக்யாசிங் தாகூர் முழங்கினார்.
இந்து மகாசபை பெண் நிர்வாகி காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு மகிழ்ந்தார். இந்தியாவின் முதல் பயங்கரவாதி கோட்சே என்று கமல் பேசியபோது தமிழக பா.ஜ.க தலைவர்கள் கொந்தளித்தார்கள். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க எம்.பி அனந்த் குமார் ஹெக்டே, “காந்தியால் முன்னின்று நடத்தப்பட்ட சுதந்திர போராட்டம் என்பது ஒரு டிராமா.

gandhi

இது குறித்து வரலாற்றுப் புத்தகங்களில் படித்தபோது என் ரத்தம் கொதித்தது. மொத்த சுதந்திர போராட்டமும் பிரிட்டிஷின் ஆதரவோடும் சம்மதத்தோடும் நடத்தப்பட்டது” என்றார்.
இந்த நிலையில் பா.ஜ.க எம்.பி-யின் பேச்சை வைத்து நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க-வுக்கு எதிரான கோஷங்கள் நாடாளுமன்றத்தில் அதிகமாக கேட்கிறது. இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் சவுதிரி பேசும்போது, இது வெறும் டிரெய்லர்தான் என்றார்.

ranjan

இந்த வார்த்தையை பிடித்துக்கொண்டார் பிரதமர் மோடி. இன்று தன்னுடைய பேச்சின்போது, “காந்திஜி உங்களுக்கு வெறும் டிரெய்லராக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அவர் வாழ்க்கை. வெள்ளையனே வெளியேறு, ஜெய் ஹிந்த் உள்ளிட்ட கோஷங்களை இஸ்லாமியர்கள் அளித்தார்கள். பிரச்னை என்ன என்றால் காங்கிரஸ் அவர்களை இஸ்லாமியர்களாகவே பார்க்கிறது. நாங்கள் அவர்களை இந்தியர்களாக பார்க்கிறோம்” என்றார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சை அவரது கட்சியினரே ஏற்பார்களா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.