கமலுக்கு கொரோனா அச்சம்? – தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவிப்பை வெளியிட்டு அகற்றிய மாநகராட்சி!

கமலுக்கு கொரோனா அச்சம்? – தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவிப்பை வெளியிட்டு அகற்றிய மாநகராட்சி!

நடிகர் கமல் கொரோனா அச்சம் காரணமாகத் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக மாநகராட்சியிடம் தெரிவித்துள்ளார். அதன் படி நாங்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம் என்ற ஸ்டிக்கரை சென்னை மாநகராட்சி ஒட்டியுள்ளது. ஊடகங்களில் செய்தி வெளியாகவே அந்த ஸ்டிக்கரும் அகற்றப்பட்டது.

kamal-house

வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள், கொரோனா பரவலுக்கு வாய்ப்புள்ளவர்களை எல்லாம் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கண்காணித்து வருகிறது தமிழக அரசு. அந்தந்த மாவட்ட நிர்வாகம் கொரோனாவுக்கு வாய்ப்புள்ளவர்கள் வீடுகளின் முன்பு அது பற்றிய எச்சரிக்கை ஸ்டிக்கரை ஒட்டி வருகிறது. இதுதவிர தாங்களாக முன்வந்து சொல்லி தனிமைப்படுத்திக் கொள்பவர்களையும் அரசு ஊக்குவித்து வருகிறது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தங்கள் குடும்பத்தை தனிமைபடுத்திக் கொண்டதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கமல் வீட்டின் முன்பு மாநகராட்சி ஒட்டியுள்ள அறிவிப்பில், “கொரோனாவிலிருந்து எங்களையும் சென்னையையும் காக்க நாங்கள் வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

kamalahassan

இதன் மூலம் கமல், அவருடன் உள்ளவர்கள் வெளியே செல்ல முடியாது. யாரையும் சந்திக்க முடியாது. சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த தகவல் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தவே, மாநகராட்சி ஊழியர் ஒருவர் வந்து அந்த அறிவிப்பை அகற்றிவிட்டு சென்றார். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.