எடப்பாடி அதிர்ச்சி… பணம் எங்கே போனது..? அமுக்கியது யார்..?

 

எடப்பாடி அதிர்ச்சி… பணம் எங்கே போனது..? அமுக்கியது யார்..?

பணம் முழுமையாகப் போய்ச் சேர்ந்ததா இதேபோல் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிச்சாமி அப்செட் ஆகி விட்டது. உச்ச நீதிமன்றத்தின் மூலம் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை போட வேண்டும் என திமுகவும், உள்ளாட்சித் தேர்தலை எப்படியாவது நடத்தியாக வேண்டும் என அதிமுகவும் நினைத்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறிவிட்டது. விக்ரவாண்டி, நாங்குநேரி இரண்டு இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றது. 

அதேபோல், உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிபெற்று விடலாம் என அதிமுக கணக்கு கொண்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது டிவியின் முன் உட்கார்ந்து இருந்த முதல்வர் எடப்பாடி மாவட்ட செயலாளரிடம் போனில் பேசியுள்ளார். தபால் வாக்குகளில் திமுக சில இடங்களில் முதலிடம் பிடித்த போது அப்செட் ஆகிவிட்டாராம் எடப்பாடி. அதன் பிறகுதான் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தபால் வாக்குகள் செல்வதாக அறிவிக்கப்பட்டது.admk

 எண்ணிக்கையின் ஆரம்ப கட்டத்தில் அதிமுகவிற்கு இணையாக திமுக வந்துகொண்டிருந்தது. மாலை 4 மணிக்கு மேல் திமுக முந்தத் தொடங்கியது. உடனடியாக அதிமுக தலைமை அலுவலகம் செல்ல தயாரானார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அமைச்சர்கள் எல்லோரும் சொந்த மாவட்டத்தில் இருக்க சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் இடம் பொங்கி இருக்கிறார் எடப்பாடி. 

’’உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக சற்று தயங்கியது. திமுகவின் சில முக்கிய நிர்வாகிகள் எங்களால் செலவு செய்ய முடியாது என்று ஒதுங்கிக் கொண்டனர். சிலரை தலைமையே ஒரு பூர்த்தி நிறுத்தியது. திமுகவில் கூட்டணி கட்சியினருக்கு சீட் கொடுப்பது கூட சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் திமுக முந்துவதற்கு என்ன காரணம்?’’ என்று கொந்தளித்துள்ளார்.edappadi

அதிமுக சார்பில் ’வைட்டமினும்’ இறைக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட பணம் முழுமையாகப் போய்ச் சேர்ந்ததா இதேபோல் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார். இதுவரை நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது. இதற்கு காரணம் தலைமை கொடுத்த பணம் முழுமையாக வாக்காளர்களுக்கு போய்ச் சேரவில்லை என்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் என்பதால் அந்தந்த கிளைச் செயலாளர்களிடம் பணத்தை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் வாக்காளர்களிடம் முழுமையாக கொண்டுபோய் சேர்க்கவில்லை. அப்படியே அமுக்கி விட்டார்கள் என்கிற கூறப்படுகிறது.