ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களை அலற வைக்கும் ஜெகன் ரெட்டி காரு… ஆந்திராவில் அதிரடி சரவெடி..!

 

ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களை அலற வைக்கும் ஜெகன் ரெட்டி காரு… ஆந்திராவில் அதிரடி சரவெடி..!

பெண் அதிகாரியை மிரட்டிய காரணத்திற்காக ஆந்திராவில் ஆளுக் கட்சி எம்.எல்.ஏ.,வை கைது செய்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி காட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதி மண்டல வளர்ச்சி அதிகாரியான சரளா என்பவர், அம்மாநில ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்., கட்சியின், நெல்லூர் புறநகர் தொகுதி எம்.எல்.ஏ., ஸ்ரீதர் ரெட்டி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனி நபர் ஒருவருக்கு குடிநீர் இணைப்பு வழங்க தாமதமானதாக கூறி, ஸ்ரீதர்ரெட்டி மொபைலில் மிரட்டுவதுடன், நேரில் குடும்பத்தாரை மிரட்டுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

சப்- இன்ஸ்பெக்டர் இல்லாததால், இந்தப்புகாரை வாங்க போலீசார் மறுத்துள்ளனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வரும் வரை காத்திருப்பதாக கூறி, அவர், போலீஸ் ஸ்டேசனிலேயே அமர்ந்தார். இச்செய்தி டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது.

jegan

இதனைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர், டிஜிபி.,யை தொடர்பு கொண்டு பேசிய, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தவறு யார் மீது இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். விசாரணைக்குபின், பெண் அதிகாரியை மிரட்டிய எம்.எல்.ஏ., ஸ்ரீதர் ரெட்டியை போலீசார் கைது செய்தனர். 

அவர் மீது ஐ.பி.சி., பிரிவின் 448, 427, 290, 506ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,வையே கைது செய்த ஜெகன் அரசின் அதிரடி நடவடிக்கை, மக்கள், கட்சியினரிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.