அமைச்சராகி விட்டேன்… ஆனால் இன்னும் என் பையை நிரப்பவில்லை….. மகாராஷ்டிரா பெண் அமைச்சரின் வருத்தம்

 

அமைச்சராகி விட்டேன்… ஆனால் இன்னும் என் பையை நிரப்பவில்லை….. மகாராஷ்டிரா பெண் அமைச்சரின் வருத்தம்

அமைச்சராகி விட்டேன் ஆனால் இன்னும் என் பையை நிரப்பவில்லை என மகாராஷ்டிரா அமைச்சர் யசோமடி தாகூர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவ சேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். கடந்த மாதம் 30ம் தேதியன்று முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அமைச்சரவையை விரிவுப்படுத்தினார். அன்று 36 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதில், காங்கிரசை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.யான யசோமடி தாகூரும் ஒருவர். 

மகா விகாஸ் அகாதி கூட்டணி

மகாராஷ்டிராவில் வாஷிம் நகரில் நேற்று ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாநில அமைச்சரான யசோமடி தாகூர் பேசுகையில், எங்களது அரசு இப்போது வரை ஆட்சியில் இல்லை. ஆனால் நான் மாநில அமைச்சராக பதவியேற்றேன். நாங்கள் இன்னும் எங்களது பாக்கெட்டை நிரப்பவில்லை என தெரிவித்தார். அமைச்சர் பேசியது சர்ச்சைக்குரிய வகையில் இருந்தது. அதாவது அமைச்சராகி விட்டோம் ஆனால் இன்னும் நாங்கள் பணம் சம்பாதிக்கவில்லை என்பது போல் இருந்தது. ஆனால் அவர் என்ன அர்த்தத்தில்  பேசினார் என்பது அவருக்குதான் வெளிச்சம்.

பா.ஜ.க.

காங்கிரஸ் அமைச்சரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. பெண் அமைச்சரின் பேச்சை எதிர்க்கட்சியான பா.ஜ.க. கையிலெடுத்து பிரச்சனை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.