’’எம்.ஜி.ஆர் மாதிரி எடப்பாடி ஜெயிப்பாருன்னு சொன்னீங்களே அதைத் தான்டா எங்களால் ஜீரணிக்க முடியல...’’

 
ச

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் முதலில் களத்தில் இறங்கின.   இதனால் இரட்டை இலை சின்னம் தொடர்பாக பிரச்சனை எழுந்தது.   கடைசியில் இரட்டை இலை சின்னம் பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்தது.  இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றார்.

ம்க்ர்

இந்த இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காமல் முடக்கப்படுமா என்ற கேள்வி வந்த போது ,  பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் இரட்டை இலை சின்னம் இருந்தால் தான் ஜெயிக்க முடியுமா என்ன? இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டாலும் எம்ஜிஆர் என்ற அடையாளம் இல்லாவிட்டாலும் எடப்பாடியார் ஜெயிப்பார் என்றார்கள்.  

சும்மா எத்தனை காலத்துக்குத்தான் எம்.ஜி.ஆர்., இரட்டை இலை என்று பேசிக்கொண்டிருப்பீர்கள்.  அதெல்லாம் பழைய காலம்.   எடப்பாடிக்கு அந்த செல்வாக்கு இருக்கிறது.  இரட்டை இலை இல்லாவிட்டாலும் அவர் வெற்றி பெறுவார் என்று சொல்லி இருந்தார் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர்.சவுக்கு சங்கர் மாதிரியே    பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பேசி வந்தனர். ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது.  

ச்

 இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தொடர்ந்து பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.   அவர்,  ’’நீங்க எவ்வளோ உருட்டுனீக கேட்டுக்கிட்டோம்..ஆனா திண்டுக்கல் இடைத்தேர்தல்ல எம்.ஜி.ஆர் மாதிரி எடப்பாடி ஜெயிப்பாருன்னு சொன்னீங்களே அதை தான்டா எங்களால் ஜீரணிக்க முடியல...’’ என்று  கூறியிருக்கிறார்.  அவர் மேலும்,  ‘’கண்ணன் குலம் என்று  கடிதாசி போட்டு எம்.ஜி.ஆரின் சமத்துவ இயக்கத்தை சாதிக் கட்சியாக்க முனைந்த வெல்லம் உருட்டி பழனிக்கு வெட்கம் வர ஈரோட்டு கிழக்கு மக்கள் தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள்.# *Getouteps*’’என்று கூறியிருக்கிறார்.

இதற்கு,   பழனிச்சாமியின் ஆதரவாளர்,   ‘’முன்மொழிய கூட ஆளில்லாத ஒரு வேட்பாளரை அறிவிச்சிட்டு எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்குன்னு உருட்டுன நீங்க எல்லாம் இத பத்தி பேசலாமாணே’’என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.