பா.ஜ.க. மீண்டும் அரசாங்கத்தை அமைக்கும் ஆனால் ஒன்று உங்களில் பலர் திரும்பி வர மாட்டீர்கள் என்பது நிச்சயம்.. யோகி

 
கரும்பு பயிரிடுவதை குறைத்தால் சர்க்கரை நோய் குறைந்துவிடும்: யோகி ஆலோசனை

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் வரும், அரசாங்கத்தை அமைக்கும்  ஆனால் ஒன்று உங்களில் பலர் திரும்பி வர மாட்டீர்கள் என்பது  நிச்சயம் என்று எதிர்க்கட்சிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்தார்.

உத்தர பிரதேசத்தில் அம்மாநில சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க. மீண்டும் வரும், அரசாங்கத்தை அமைக்கும் மற்றும் கோவிட்-19ன் மூன்றாவது அலையை நிறுத்தும். ஆனால் ஒன்று உங்களில் பலர் திரும்பி வர மாட்டீர்கள் என்பது  நிச்சயம். மக்களின் மீதான சுமையை குறைப்பதற்கு பதிலாக, முந்தைய அரசாங்கங்களே சுமையாக இருந்தன.

பா.ஜ.க.

உத்தர பிரதேசத்தில் இப்போது பி.பி.இ. கருவிகள், முககவசங்கள் மற்றும் சானிடைசர்கள் தயாரிக்கப்படுகின்றன. மாநில அரசு இலவச ரேஷன், இலவச பரிசோதனைகள், இலவச தடுப்பூசிகள் மற்றும் இலவச மருந்துகளை வழங்கியது. மாநிலத்தில் 16 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மாநில அரசு செயல்பட்டு வருகிறது. இதுவே அனைவரின் ஆதரவு, அனைவருக்கும் வளர்ச்சி.

ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் ஏன் இருக்கக்கூடாது?. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த புதன்கிழமையன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், முந்தைய சமாஜ்வாடி அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு பக்கசார்புடன் செயல்பட்டது. எனது அரசாங்கம் 2017ல் மக்களுக்கு எடுத்த அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றியது என்று தெரிவித்தார்.