அகிலேஷ் யாதவின் கிருஷ்ணர் கனவுக்கு பதிலடி கொடுத்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

 
பகவான் கிருஷ்ணர்

பகவான் கிருஷ்ணர் தினமும் தனது கனவில் வந்து ராம ராஜ்ஜியத்தை நிறுவுவேன் என்று கூறுவதாக கூறிய அகிலேஷ் யாதவுக்கு, மதுராவுக்கு எதுவும செய்யாமல் ஆட்சியில் இருந்தவர்களை இப்போது கிருஷ்ணர் இப்போது சபித்து கொண்டிருப்பார் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சமாஜ்வாடி தலைவர் கடந்த சில தினங்களுக்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பகவான் கிருஷ்ணர் தினமும் இரவில் எனது கனவில் வந்து, எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ராம ராஜ்ஜியத்தை நிறுவுவேன் என்று என்னிடம் பகவான் கிருஷ்ணர் சொல்கிறார் என்று தெரிவித்தார். அகிலேஷின் இந்த பேச்சுக்கு உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.

அகிலேஷ் யாதவ்

அலிகாரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில் கூறியதாவது: மதுரா, பிருந்தாவனம், பர்சானா, கோகுலம் ஆகியவற்றுக்கு எதுவும் செய்யாமல் ஆட்சியில் இருந்தவர்களை பகவான் கிருஷ்ணர் சபிக்க வேண்டும். அவர்கள் (அகிலேஷ் யாதவ்) கிருஷ்ணரின் பெயரை எடுத்துக் கொண்டு, அவர் தங்கள் கனவில் வருகிறார் என்று கூறுகிறார்கள். இப்போது கிருஷ்ணர் அவரை சபித்து கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது நீங்கள் கலவரத்தை தூண்டினீர்கள், பயங்கரவாதிகளை விடுவித்தீர்கள். இப்போது யாராவது ராமர் கோயில் கட்டும் போது, நீங்கள் குறைந்தபட்சம் மன்னிப்பு கேட்க வேண்டும். 

முதல்வரின் சொந்த ஊரிலேயே ஆட்கடத்தல் நடக்கிறது… யோகி ஆதித்யநாத் அரசை தாக்கிய பிரியங்கா காந்தி

முந்தைய ஆட்சிகளில் சில சமயம் ராம ஜென்ம பூமி, சில சமயம் நீதிமன்றங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. பச்சோந்தி போல் இந்த பயங்கரவாதிகள் நிறம் மாறினர். அதேபோல் தான் இன்று ஆட்சியில் இருந்திருந்தால், நீண்ட காலத்துக்கு முன் கட்டப்பட்ட ராமர் கோயில் கிடைத்திருக்கும் என்று கூறுகிறார். முந்தைய அரசில் கலவரக்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் முதல்வர் இல்லத்துக்கு வரவழைத்து மரியாதை செய்யப்பட்டது. இப்போது கலவரக்காரர்கள் காய்கறிகள் விற்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். கடந்த அரசாங்கம் தீவிரவாதிகளுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்ற நிலையில், பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்ல ஏ.டி.எஸ். மையத்தை எனது அரசு உருவாக்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.