ஆட்சியில் இருந்தால் ஒன்றும் செய்யாதவர்கள் இப்போது தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள்.. எதிர்க்கட்சிகளை சாடிய யோகி

 
யோகி

உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தால் ஒன்றும் செய்யாதவர்கள் இப்போது தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள் என்று எதிர்க்கட்சிகளை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சாடினார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் டிவிட்டரில், எதுவும் செய்யவில்லை ஆனால் தேர்தல் போருக்கு தயாராகி விட்டதே தவிர என்று ஒரு பேச்சு வழக்கு உண்டு. ஒட்டு மொத்த எதிர்க்கட்சியும் அப்படித்தான். ஆட்சியில் இருந்தால் ஒன்றும் செய்யாதீர்கள், இப்போது அனைவரும் தேர்தல் போருக்கு தயாராகி வருகின்றனர். என்று பதிவு செய்து இருந்தார்.

பாகிஸ்தான்

மேலும், பாகிஸ்தானை எதிரியாக நினைக்காதவர்கள், ஜின்னாவை நண்பராக தெரிகிறது. அவர்களின் கல்வி மற்றும் பார்வை (தொலைநோக்கு) பற்றி என்ன சொல்ல முடியும். அவர்கள் தங்களை சோசலிஸ்டுகள் என்று அழைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் வன்முறை அவர்களின் நரம்புகளில் ஓடுகிறது என்று யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.

சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்

உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. உத்தர பிரதேச தேர்தலில், பா.ஜ.க. கூட்டணி, சமாஜ்வாடி கூட்டணி, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் என நான்கு முனை போட்டி நிலவும் என கூறப்படுகிறது. இருப்பினும், எதிர்வரும் தேர்தல் பா.ஜ.க. கூட்டணிக்கும், சமாஜ்வாடி கூட்டணிக்கும் இடையிலான நேரடி மோதலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.