தேர்தலில் போட்டியிட சீட் வழங்க மேஜைக்கு கீழே பணம் வாங்குகிறது.. சமாஜ்வாடியை தாக்கிய யோகி ஆதித்யநாத்

 
கரும்பு பயிரிடுவதை குறைத்தால் சர்க்கரை நோய் குறைந்துவிடும்: யோகி ஆலோசனை

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவதற்காக சமாஜ்வாடி கட்சி மேஜைக்கு கீழே பணம் வாங்குகிறது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.

உத்தரபிரதேசம் காசியாபாத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:  பழக்கம் சீக்கிரம் குணமாகாது அதனால்தான் முகத்தை மறைக்கும் அவசரத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதை தவிர்த்து விட்டு மவுனமாக மேஜைக்கு அடியில் கட்சி சின்னத்தை பணம் வாங்கி வருகிறது. கைரானாவிலிருந்து வர்த்தகர்கள் வெளியேற காரணமானவர்கள், முசாபர்நகர் கலவரத்தின் குற்றவாளிகளை தனது வேட்பாளர்களாக அறிவித்தன்மூலம் சமாஜ்வாடி கட்சி மீண்டும் அதன் உண்மையான தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்த குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம். உத்தர பிரதேச மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன், சாமானிய மக்களின் ஆசியுடன் பா.ஜ.க. மார்ச் 10ம் தேதி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கடந்த காலத்தில் செய்தது போல், தொழில்முறை குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளை பா.ஜ.க. அரசு ஒடுக்கும்.

பா.ஜ.க.

உத்தர பிரதேசத்தை ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவுபடுத்தும் வகையில், மாநிலத்தில் 551 ஆக்சிஜன் ஆலைகளை அரசு நிறுவியுள்ளது. மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக ஒருங்கிணைந்த கோவிட் கட்டுப்பாட்டு மையம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.