கலவரத்தில் ஈடுபட்டால் தங்களின் போஸ்டர் சுவர்களில் காணலாம் என்பது கலவரக்காரர்களுக்கு தெரியும்.. யோகி ஆதித்யநாத்

 
உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு தடை; அதிர்ச்சி கிளப்பும் யோகி

எனது ஆட்சி காலத்தில், கலவரக்காரர்கள் ஏதேனும் கலவரத்தில் ஈடுபட்டால், அவர்களின் சுவரொட்டிகள் தெருக்களின் சுவர்களில் காணப்படும் என்பது கலவரக்காரர்களுக்கு தெரியும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களின் பட்டியலை நீங்கள் பார்க்கலாம், அதில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நபர்களை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். எனது ஆட்சி காலத்தில், கலவரக்காரர்கள் ஏதேனும் கலவரத்தில் ஈடுபட்டால், அவர்களின் சுவரொட்டிகள் தெருக்களின் சுவர்களில் காணப்படும் என்பது கலவரக்காரர்களுக்கு தெரியும். 

ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

பிரதமர் மோடியின் கோவிட் நிர்வாகத்தை உலகம் முழுவதும் பாராட்டுகிறது. நம் நாடு இதுவரை 160 கோடி தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. ஆக்சிஜன் நெருக்கடி இல்லை, ஒரு சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அனைவருக்கும் இலவச தடுப்பூசிகள வழங்குவது கோவிட்-19ஐ ஒரளவுக்கு தோற்கடிக்க உதவியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தல்

உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் இன்னும் சில வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.