Yadiyoorappa-Yediyurappa-Yeddyurappa-Yediyurappa – ஓ இதான் நாலு பேர் நாலுவிதமா பேசுறதா?

 

Yadiyoorappa-Yediyurappa-Yeddyurappa-Yediyurappa –  ஓ இதான் நாலு பேர் நாலுவிதமா பேசுறதா?

கர்நாடகாவில் நடந்த ஒவ்வொரு ஆட்சி மாற்றத்திற்கும் பொட்டி மாறுவதில் இருக்கும் பங்கை மறுக்கவே முடியாது. எனவே, தார்மீக அடிப்படையில் ஒருமுறையாவது தன் பெயரை ‘பொட்டியூரப்பா’ என மாற்றினால் ஒருவேளை ஆட்சி நீடிக்குமோ என்னவோ?

வாகனத்துறையில் ஏற்பட்டுள்ள தொயவு காரணமாக 10 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள் தேங்கி நிற்கின்றன, செயற்கை நுண்ணறிவு ரோபோக்களால் பல துறைகள் அழியும் என ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு நெருக்கடியில் சிக்கித்தவித்தாலும் இந்த நியுமராலஜி உள்ளிட்ட மாய ஜித்து வேலைகளுக்கு எப்போதுமே மவுசு இருக்கத்தான் செய்கிறது. 1980களில் இருந்து கர்நாடக முதல்வர் (இன்றைய தேதிக்கு) எடியூரப்பா இதுவரை அவரது பெயரில் ஸ்பெல்லிங்கை நான்கு முறை மாற்றியுள்ளார். ஆச்சர்யமாக நான்குமுறை பெயரை மாற்றிய அவர் நான்காவது முறையாக முதல்வராக அமர்ந்துள்ளார். நான்கு முறையும் ஆட்சியை அவரால் முழுமையாக நிறைவுசெய்ய முடியவில்லை.

Yeddyurappa

1980-களில் Yadiyoorappa, இந்திய சந்தைகள் திறந்துவிடப்பட்ட‌90-களில் Yediyurappa என டைமிங்காக்க மாற்றினார். புதிய ஆயிரமாவது ஆண்டு  பிறந்த 2000களில் Yeddyurappaவானார். பின்னர் சில ஆண்டுகளில், 90s கிட்ஸ்கள் கிண்டல் செய்தததாலோ என்னவோ, Yediyurappaவாகி இப்போது Yediyurappaவில் செட்டில் ஆகியுள்ளார் தற்போதைக்கு. ஒவ்வொரு முறை பெயர் மாற்றம் நிகழ்ந்தாலும் அவருடைய துரதிர்ஷ்டம் கொஞ்சமும் மாறாதபோதுகூட இது வேலைக்காகாது என்பதை உணரவில்லை எடியூரப்பா. பத்ரிகைகளில் வேலைப்பார்க்கும் உதவி ஆசிரியர்களுக்கு உங்களால் எவ்வளவு இடைஞ்சல் தெரியுமா எடியுரப்பா சார்? கர்நாடகாவில் நடந்த ஒவ்வொரு ஆட்சி மாற்றத்திற்கும் பொட்டி மாறுவதில் இருக்கும் பங்கை மறுக்கவே முடியாது. எனவே, தார்மீக அடிப்படையில் ஒருமுறையாவது தன் பெயரை ‘பொட்டியூரப்பா’ என மாற்றினால் ஒருவேளை ஆட்சி நீடிக்குமோ என்னவோ?