அண்ணாமலையின் பாதயாத்திரையில் ‘செட் அப்’ செய்யப்பட்ட பெண்கள்

 
அண்ணாமலை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரைக்கு சரக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்ட பெண்களை கையில் பட்டியல் வைத்து கணக்கெடுப்பு நடத்திய பாஜகவினரால் பரபரப்பு ஏற்பட்டது. 

Image

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரை கடந்த ஐந்து தினங்களாக மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று ஆறாவது நாளில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில்  பாதயாத்திரை தொடங்கினார். கோட்டை பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பாதயாத்திரை ஆனது திருமயம் கடைவீதி பாப்பா வயல் வழியாக திருமயம் பேருந்து நிலையம் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று நிறைவடைந்தது.


இந்த பாதயாத்திரை முன்னிட்டு கூட்டத்தைக் கூட்ட திருமயம் பகுதி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து டாடா ஏசியில் பெண்கள் அழைத்து வரப்பட்டனர். ஒவ்வொரு வண்டியில் வரும் பெண்களுக்கும் பாஜக சார்பில் சேலைகள் வழங்கி அதை அணிவிக்க வைத்து அழைத்து வந்த நிலையில், சேலைகள் வழங்காதவர்களுக்கு கட்டாயம் சேலை வழங்கப்படும் என்று பாஜக நிர்வாகிகள் பெண்களிடம் கூறினர். சரக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்ட பெண்களை கையில் பட்டியல் வைத்து கணக்கெடுப்பை பாஜக நிர்வாகிகள் எடுத்தனர். மேலும் ஒன்பது மணிக்கு பாதயாத்திரை தொடங்கப்படும் என்று தெரிவித்த நிலையில் 10.30 மணி வரை முளைப்பாறி மற்றும் மோடியின் புகைப்பட அட்டையை கையில் கொடுத்து காத்திருக்க நிற்க வைத்ததால் கால் வழித்த பெண்கள் சாலை ஓரத்திலேயே அமர்ந்திருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. 

Image

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செல்லும் இடங்களில் கூட்டம் இல்லாததால் ஒரே இடத்தில் நின்ற பெண்களை அவர் செல்லும் இடங்களுக்கு அடுத்தடுத்து அழைத்து வந்த நிகழ்வு பாஜக கட்சியின் பரிதாபத்தை வெளிப்படுத்தியதாக அமைந்தது. மேலும் திருமயம் பேருந்து நிலையம் அருகே பாதயாத்திரையின் இறுதியாக அண்ணாமலை பேசி முடித்த பிறகு சரக்கு வாகனத்தில் வைத்து சிற்றுண்டி வழங்கப்பட்டதை முண்டியடித்து போட்டி போட்டு அதனை வாங்க பாஜகவினர் மற்றும் பொதுமக்களால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.