விசிகவை வன்னியரசு அபகரித்தால் திருமாவளவன் ஏற்றுக் கொள்வாரா?

 
v

 அதிமுக விவகாரத்தில் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பளித்ததை அடுத்து அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் பாமக நிறுவனர் ராமதாஸ்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,  எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்தார்.

அர்

 இது குறித்து ஓபிஎஸ் அணியில் இருக்கும் மருது அழகுராஜ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை வன்னி அரசு அபகரித்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?  பாமகவை பணம் படைத்த இரண்டாம் கட்ட தலைவர்கள் அபகரித்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அதனால் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அபகரிப்பை அபகரிப்பு அரசியலை பாஜக ,பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் சிவகங்கை செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அதிமுக விவகாரம் குறித்த கேள்வி எழுந்த போது,  அதிமுகவின் சட்ட விதிகளின்படி தொண்டர்களால் தேர்வு செய்யப்படுபவரே கட்சியின் பொதுச் செயலாளர் .  இதற்கு முன்பு புரட்சித் தலைவரும்புரட்சித்தலைவியும் தாங்கள் மறைகின்ற வரை கட்சியின் பொதுச் செயலாளர்களாக இருந்தார்கள்.  அதற்கு காரணம் அவர்கள் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டார்கள்.  

ம்

 எம்ஜிஆர் - ஜெயலலிதா இருவரும் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு கொடுத்த அந்த உரிமையை எடப்பாடி பழனிச்சாமி தட்டி பறித்து விட்டார் . எடப்பாடியின் இந்த அபகரிப்பு அரசியலை  கூட்டணியில் இருக்கும் பாஜக ஆதரிக்கவே கூடாது.  பாஜக மட்டுமல்ல எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்,  ராமதாஸ் ஆகியோருக்கும் இதே வேண்டுகோளை வைக்கிறேன்.

 விடுதலை சிறுத்தைகள் கட்சியை வன்னியரசு,  பாமகவை பணம் படைத்த இரண்டாம் கட்ட தலைவர்கள் அபகரித்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா ? ஆகையால் இந்த அபகரிப்பு அரசியலை எந்த நிலையில் வந்தாலும் அதனை அவர்கள் நிராகரிக்க வேண்டும்; கண்டிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.   அப்படியே எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்தால் ஆதரிக்க கூடிய அந்த கட்சிகள் மக்கள் மன்றத்தில் நிராகரிக்கப்படும்.  நாங்களும் சும்மா விடமாட்டோம் என்று ஆவேசப்பட்டார்.