மாமா -மருமகன் சென்டிமென்டுக்கு மயங்குவாரா? மாட்டாரா?

 
op

 எடப்பாடி பழனிச்சாமியின் எட்டாவது தோல்வி என்று திமுக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.   ஈரோடு இடைத்தேர்தலில் பெற்ற தோல்வியோடு எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த எட்டாவது தோல்வி என்று திமுகவினர் விமர்சனம் செய்து வரும் நிலையில் ,  இந்தத் தொடர் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.  

 ஆனால் ,  அதிமுகவின் தோல்விக்கு காரணம் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் பிரிந்து சென்றது தான் காரணம்.  இதனால் வாக்குகள் சிதறுகின்றன என்றும் அதிமுக முக்கிய மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர் என்று தகவல்.   இதனால்தான் பாஜக அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது .  அதேபோல் அதிமுகவிலிருந்து வெளியேறிய பலரும் கூட இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

ட

 இந்த நிலையில் தான்  கன்னியாகுமரி மாவட்ட ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் எஸ். ஏ. அசோகன்.  இவர் இடைத்தேர்தல் தோல்விக்கு பின்னர் தனது முகநூலில் ஒரு பரபரப்பு கருத்தினை பதிவிட்டு இருக்கிறார் . ஓபிஎஸ், இபிஎஸ் என்று இரு அணியிலும் இருக்கும் ஐடிவிங்க் நிர்வாகிகள் சில காலம் பொறுமையாக இருக்க வேண்டும்.     ஒருவர் மீது ஒருவர் அநாகரிகமாக பதிவு போடுவதை தவிர்க்க வேண்டும்.  ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத்தான் கொண்டாட்டம் என்பதை இடைத்தேர்தல் முடிவு காட்டுகின்றது.

இந்த பிரச்சனைகளை களைய வேண்டும் என்றால் மாமா தமிழ் மகன் உசேன் , அண்ணன் தளவாய் சுந்தரம் இரண்டு பேரும் இதற்கான முயற்சியில் இறங்க வேண்டும் என்கிறார் .  அதாவது அதிமுக அவை தலைவர் தமிழ் மகன்  உசேனை சந்தித்து  இபிஎஸ்- ஓபிஎஸ் இருவரையும் இணைந்து செயல்பட முயற்சி செய் முன்னெடுக்க சொல்லி வலியுறுத்த போவதாகவும் கூறியிருக்கிறார் .  

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தற்போது தான் எடப்பாடி பழனிச்சாமியால் கட்சியில் தனக்கு முக்கியத்துவமும் மரியாதையும் வந்திருக்கிறது.  இந்த.  நேரத்தில் அசோகன் சொல்கிறார் என்று மாமா -மருமகள் செண்டிமெண்ட் எல்லாம் மயங்கமாட்டார்.  தமிழ் மகன் மயங்கினான் பின்விளைவுகள் தனக்கு என்னவாக இருக்கும் என்பது அவர் அறிவார். அதனால் மாமா மருமகன் செண்டிமெண்ட்க்கு அவர் அறவே மயங்கமாட்டார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள் .  இதனால் அதிமுகவில்  சலசலப்பு அடித்துக் கொண்டே இருக்கிறது.