நேருவின் தம்பிக்கு ஏற்பட்ட கதிதான் சிவாவுக்கு ஏற்படுமா? அச்சம் எழுப்பும் எச்.ராஜா

 
ஹ்

அமைச்சர் நேருவின் தம்பிக்கு ஏற்பட்ட கதி தான் திருச்சி சிவாவுக்கு ஏற்படுமா என்ற அச்சம் எழுகிறது என்கிறார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா.

 அமைச்சர் கே. என். நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று அதிகாலை வாக்கிங் சென்ற போது கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.  கை, கால் கட்டிய நிலையில்,   வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு கோரமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  இந்த கொலை வழக்கில் கொலையாளிகள் குறித்து இதுவரைக்கும்,  இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் கூட எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.  இந்த நிலையில் இந்த கதி தான் திருச்சி சிவாவுக்கு ஏற்படுமா என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார் எச் . ராஜா.

ச்ட்

 அண்மையில் திருச்சியில் திமுக எம்பி சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.  திருச்சி காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த திருச்சி சிவா எம்பியின் ஆதரவாளர்கள் மீது காவல் நிலையத்திற்கு உள்ளேயே புகுந்து அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் தான் எச். ராஜா இப்படி ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார் . 

அந்த விவகாரத்தில் அமைச்சர் நேருவும் திருச்சி சிவா எம்பியும் ஒன்றாக இணைந்து எங்களுக்குள் இனி எந்த பிரச்சனையும் இல்லை.  நடந்தது நடந்து விட்டது.  இனி நடப்பவை நன்றாக நடக்கும் என்று அறிவித்தனர்.

 இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மத்திய பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்க மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நடந்த இந்த கூட்டத்திற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா கலந்து கொண்டார்.  இக்கூட்டத்தில் அவர் சிறப்புரையாற்றினார் .  அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ர்

 அப்போது,   திமுக என்றாலே வன்முறை கட்சி என்பது அனைவருக்கும் தெரியும்.  அவர்களுக்கு உள்ளேயே வன்முறை கலாச்சாரத்தை கையாளுகின்றார்கள். திருச்சி சிவாவால் அவரது வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க முடியவில்லை.  நேருவின் தம்பிக்கு நடந்தது போல் சிவாவுக்கும்  நடந்து விடுமா என்ற கேள்வி எழுகிறது என்று சொன்ன சொன்னவர்,  தமிழ்நாட்டில் ஒரு பாஜகாரர் கூட உயிரோடு இருக்க முடியாது என்று பேசிய ஆர். எஸ் . பாரதியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.   ஸ்டாலினுக்கு நிர்வாகம் கட்சி குடும்பம் என்று எதன் மீதும் கட்டுப்பாடு இல்லை இந்த மாதிரியான பரிதாபகரமான நிலை இருக்கிறது என்றார்.