#BREAKING “இன்றைய அரசியல் களம் சீர்கெட்டுவிட்டது... தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன்”- சித்தராமையா

 
தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: சித்தராமையா

தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.


2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். வயது மூப்பு காரணமாகவும் இனி வரும் எந்த தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ள கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, உடல்நிலை முன்பு போல் வலுவாக இல்லை, முன்பை போல அதே உற்சாகத்துடன் பணியாற்றுவது சாத்தியமில்லை எனக் கூறியுள்ளார். இன்றைய அரசியல் களம் சீர்கெட்டுவிட்டதாக கூறியுள்ள அவர், நேர்மையான அரசியலுக்கு இடமே இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 50 ஆண்டுகளாக உங்களில் ஒருவனாக என்னை அரவணைத்து வழிநடத்தியுள்ளீர்கள். கர்நாடக மக்களுக்கு நான் கடன்பட்டுள்ளேன். மக்கள் பணிக்கே என் வருங்கால வாழ்வையும் அர்ப்பணிக்கிறேன் என சித்தராமையா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.