திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக?
திமுக கூட்டணியில் இருந்து வெளியேற மதிமுகவினர் வைகோவுக்கு நெருக்கடி கொடுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஜூன் 27ல் மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் தொடர்வதா? என மதிமுக பொதுக்குழு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. தவெகவுடன் கூட்டணி வைக்க வைகோவிடம் மதிமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆகையால் அரசியல் நிலைப்பாடு குறித்து பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட திமுகவினர் உரிய மரியாதை அளிக்கவும் இல்லை கௌரவமான சீட்டும் வழங்கவில்லை என்று அக்கட்சியினர் வைகோவுடன் ஆவேசமாக பேசினர். ஆனால் வைகோ கூட்டணி தர்மத்தை கணக்கில் வைத்து அமைதியாக இருக்க வேண்டும் என்று அனைவரையும் ஆசுவாசப்படுத்தினார். தொடர்ந்து வைகோவுக்கு கட்சியினர் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் அவர் கூட்டணி தர்மத்தை மதித்து தொடர்ந்து திமுகவில் பயணித்து வருகிறார். எனவே அவர் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு குறைவுதான் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார். ஆனால் கட்சி நிர்வாகிகள் அழுத்தம் கொடுப்பதால் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

