தேர்தல் ஆணையம் EPS-ஐ பொதுச்செயலாளராக அங்கீகரிக்குமா? நிராகரிக்குமா?
அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பத்து நாட்களுக்குள் முடிவெடுக்கவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இது குறித்த சிவில் வழக்குகள் டெல்லி உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தற்போது இது குறித்த முடிவுகள் எடுக்க முடியாது என்றும் அந்த வழக்கிற்கான முடிவுகளுக்கு பின்பு தான் பொதுச்செயலாளர் குறித்த முடிவுகள் எடுக்கமுடியும் என்பதே தேர்தல் ஆணையத்தின் முடிவாக இருக்கும் என்கிறார் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி.
அவர் மேலும், அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் என்ன முடிவெடுக்கும் தேர்தல் ஆணையம் ? EPS-ஐ பொதுச்செயலாளராக அங்கீகரிக்குமா? நிராகரிக்குமா? என்று தனது வலைதள பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தி இருக்கிறார். அதில் நிராகரிக்கும் என்று 57 .7 சதவிகிதமும், அங்கீகரிக்கும் என்று 47.3 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகி இருக்கின்றனர்.
இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு எதிர்ப்பும் வலுவாக இருக்கிறது என்றே தெரிகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் மாநாடு கூட்டுவதால், அவருக்கும் ஆதரவு கூட்டம் இருக்கும் என்றே இது காட்டுகிறது.