சீமான் எல்லாம் தலை நிமிர்ந்து நடக்கும் போது நான் எதுக்கு விஷம் குடித்து சாகணும்? -ஜோதிமணி

 

சீமான் எல்லாம் தலை நிமிர்ந்து நடக்கும் போது நான் எதுக்கு விஷம் குடித்து சாகணும்?  -ஜோதிமணி

பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள, அப்பட்டமாக கே.டி ராகவன் போன்ற பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கின்ற சீமானெல்லாம் தலைநிமிர்ந்து வாழ்கிறபோது, பெண்களின் பாதுகாப்பிற்கு போராடுகிற நான் எதற்கு விஷம் குடிக்க வேண்டும்? பாஜகவைச் சொன்னால் சீமானுக்கு ஏன் வலிக்கிறது? என்று கேட்கிறார் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி.

சீமான் எல்லாம் தலை நிமிர்ந்து நடக்கும் போது நான் எதுக்கு விஷம் குடித்து சாகணும்?  -ஜோதிமணி

அவர் மேலும் இதுகுறித்த தனது வீடியோ விளக்கத்தில், ‘’ ராகவன் பாலியல் குற்றத்தை நாங்கள் தட்டிக் கேட்டோம். பாஜக பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதையும் அதன் தலைவராக இருக்கின்ற அண்ணாமலை குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் போவோம் என்று சொன்னதையும் எதிர்த்து நாங்கள் போராடினோம். இதற்காக அண்ணாமலையிடம் இருந்தும், ராகவனிடம் இருந்தும் எந்த எதிர்வினையும் வரவில்லை. ஆனால் மாறாக சீமானிடம் இருந்து எதிர்வினை வந்தது.

உலகத்தில் வேறு யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார் என்று எந்தவித கூச்சமும் இல்லாமல், வெட்கமும் இல்லாமல் சீமான் பொதுவெளியில் ராகவனின் பாலியல் குற்றச்சாட்டை ஆதரித்து இருந்தார். ஏன் சீமான் பாலியல் குற்றத்தை ஆதரிக்கிறார்? தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏன் நெறி கட்டுகிறது? அதனால்தான் நான் சீமானைப் பார்த்து கேட்டேன். உங்கள் மேல் பாலியல் குற்றச்சாட்டு இருப்பதால் அதற்கு பயந்துதான் நீங்கள் ராகவனின் பாலியல் குற்றச்சாட்டை ஆதரிக்கிறீர்களா? இல்லை பாரதிய ஜனதா கட்சியின் பி டீம் என்பதால் நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று கேட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது.

சீமான் எல்லாம் தலை நிமிர்ந்து நடக்கும் போது நான் எதுக்கு விஷம் குடித்து சாகணும்?  -ஜோதிமணி

சீமானிடம் எந்த தவறும் இல்லை என்றால் அவர் என் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். நேர்மையாக நியாயமாக பதில் சொல்ல வேண்டியது தானே. அப்படி பதில் சொல்ல முடியாமல் ஏன் நீ விசம் கொடுத்து சாவேன் என்று சொல்கிறார். இதுதான் ஒரு கண்ணியமான அரசியலா? நான் எதுக்கு விஷம் குடித்து சாகணும்? பெண்ணால் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட சீமான் பாஜகவின் பாலியல் குற்றச்சாட்டை அப்பட்டமாக ஆதரிக்கிற சீமான் எல்லாம் தலை நிமிர்ந்து நடக்கும் போது என்னை மாதிரி பெண்கள் புரட்சிக்கு போராடுகின்ற நான் ஏன் விஷம் குடித்து சாகணும்.

சீமான் எல்லாம் தலை நிமிர்ந்து நடக்கும் போது நான் எதுக்கு விஷம் குடித்து சாகணும்?  -ஜோதிமணி

எங்கெல்லாம் பிரச்சினை வருகிறதோ குற்றங்கள் நடக்கிறதோ அங்கே நான் மட்டுமல்ல எல்லா பெண்களும் போராடுவோம். இந்த மாதிரி பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை நாங்கள் தொடர்ந்து தோலுரிப்போம். என்னை போய் சாவு என்று சொன்னதற்காக நாங்கள் பயந்து கொண்டு பின்வாங்கி விட மாட்டோம். இன்னும் தைரியமாக வீரியமாக கேள்விகள் கேட்டு உங்கள் உண்மையான முகத்தை தோலுரித்து மக்களுக்கு காட்டுவோம்’’ என்று சொல்லி இருக்கிறார்.

பூலித்தேவன், தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் மற்றும் கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதா ஆகியோருக்கு சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றபோது, யாரும் செய்யாததையா செய்துவிட்டார் ராகவன். அவரின் அனுமதி இல்லாமல் அந்தரங்கத்தை வீடியோ எடுத்தது தவறு என்று தாங்கள் சொன்னதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தங்களை கடுமையாக விமர்சித்து வருகிறாரே என்ற கேள்விக்கு,

’’வளர்ந்து வருகிற ஒருவனை வீழ்த்துவருவதற்கு கடைசி ஆயுதம்தான் இந்த கருவி. காங்கிரசில் எத்தனையோ தலைவர்கள் இருக்கும் போது வலுக்கட்டாயமாக ஜோதிமணி பேசுகிறார். கே.டி.ராகவன் மீது வழக்கு போடுங்கள் என்று உங்க முதல்வர் ஸ்டாலினிடம் கேட்க வேண்டும் ஜோதிமணி. என்கிட்ட பேசக்கூடாது. நீங்க எனக்கு திட்டி கடிதம் எழுகிறீர்கள். ஆனால், ராகவனை திட்டி கடிதம் எழுதவில்லையே. ஏன் எழுதவில்லை. அவுங்களுக்கு ராகவன் அல்ல பிரச்சனை. அந்த காணொளி அல்ல பிரச்சனை. சீமான் பிரச்சனை. ஒருத்தன் நெஞ்சுல அடிச்சு அழுவுறான். சீமானுக்கு 30 லட்சம் பேர் ஓட்டு போட்டுட்டாங்களே என்று. 50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டு நாசமாக்குன கட்சிக்கு இன்னமும் ஓட்டு போட்டுக்கிட்டு இருக்கான். என்னைய பிஜேபியின் பி டீன் என்கிறாய். ரொம்ப கஷ்டமா இருந்தா வெசம் குடிச்சு செத்துப்போ.

சீமான் எல்லாம் தலை நிமிர்ந்து நடக்கும் போது நான் எதுக்கு விஷம் குடித்து சாகணும்?  -ஜோதிமணி

அதிர்ச்சி அடைஞ்சுட்டேன். இதையெல்லாம் என்னால தாங்க முடியலன்னு சொல்லுறதுக்கு, ஒருதம்பி எழுதியிருக்கான்… பக்ரீத்துக்கு 300 ரூபா சேர்த்து வச்சிருக்கேன். அத அனுப்புறேன் செத்துப்போறியா?ன்னு சொல்லியிருக்கான். அதத்தான் சொல்ல வேண்டியதிருக்கு. அவ்வளவு வயிற்றெரிச்சல் அவ்வளவு காழ்ப்புணர்ச்சி.

ஒரு தேசிய இனத்தின்பிள்ளைகள், அழிந்துவிட்ட வீழ்ந்துவிட்ட இனத்தின் பிள்ளைகள் கண்ணுமுன்னாடி பல லட்சம் மக்களை சாகக்கொடுத்தோம். பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் சுரண்டல், பாலியல் கொடுமை பற்றி பேசும் பெருந்தகைகள் குறிப்பாக தங்கை ஜோதிமணி போன்றவர்கள் உங்கள் கட்சியின் தலைவர் அனுப்பின ராணுவம் பல்லாயிரக்கணக்கான அக்கா, தங்கைகளை, உன்னைப்போன்ற தங்கைகளை வன்புணர்ச்சி செய்து கொலை செய்தார்கள். அதெல்லாம் பாலியல் கொடுமை இல்லையா? வன்புணர்ச்சி இல்லையா? ஆயுதங்களை வைத்தே புணர்ந்தது. நீங்கள் காசு கொட்டி கொடுத்து பயிற்சி கொடுத்து ஆயுதங்கள் கொடுத்த சிங்கள ராணுவம் என் அக்கா தங்கைகளை கதற கதற கொலை செய்தது. அதைப்பற்றியெல்லாம் நீங்க ஒரு வார்த்தை பேசல.. கண்டிக்கல. இவர்களுக்கு கண்ணுல தூசியா நான் உறுத்திக்கிட்டே இருக்கேன். படுக்கும்போது என்னைய திட்டி ஒரு பதிவு. எழுந்திருச்சதும் ஒரு பதிவு. சரி, வேர்க்காமல் விளையாட முடியாது. விமர்சனம் இல்லாமல் வளர முடியாது. நல்லா விமர்சியுங்கள்’’என்றார் சீமான்.