திமுக மீது ஏன் இப்படி ஆளுநர் சகதியை வாரி இறைக்கிறார்? செல்வபெருந்தகை

 
se

தமிழ்நாட்டை நிம்மதி இல்லாமல் செய்ய வேண்டும்.  கலவர பூமியாக ஆக்க வேண்டும் என்று நினைக்கிறார் ஆளுநர்  என்று குற்றம் சுமத்தியுள்ளார் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர்  செல்வப் பெருந்தகை.

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.  காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் களம் இறங்கி இருக்கிறார்.  அவருக்கு ஆதரவாககாங்கிரசும் கூட்டணி கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

sr

 காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான செல்வப் பெருந்தகை ஈரோட்டில் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது,    அம்பேத்கரையும் மோடியை தொடர்பு படுத்தி ஆளுநர் பேசியிருக்கிறார்.   தமிழ்நாட்டு அண்மையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அவர் இவ்வாறு பேசியது பெரும் பேசு பொருளாகி இருக்கிறது.   தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு வன்கொடுமைகள் நடைபெறுகிறது.   30% தான் செலவிடப்படுகிறது.  70% வேறு பல திட்டங்களுக்காக மத்திய அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்படுவதாக கூறியிருக்கிறார்.  

ஆளுநர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்.  சிறப்பு உட்கூறுகள் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற தொகை  கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செலவிடப்படவில்லை. சிறப்பு உட்கூரு திட்டம் பல மாநிலங்களில் செலவிடப்படாமல் உள்ளது.   தமிழ்நாடு மீதும் தமிழ்நாடு அரசு மீதும் ஆளுநர் கட்டுப்பாடு இன்றி சகதியை ஏன் வாரி இறைக்கிறார்?  திமுக ஆட்சியில் ஆடிட் நிறைவு பெறவில்லை . ஏன் கண்மூடித் தனமாக திமுக மீது குற்றம் சாட்டுகிறார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.   

 ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் தான் ஆகின்றன.   பத்திர துறை, வருவாய் துறை மீது ஆடிட் நடந்திருக்கிறது.   அதிமுக காலத்தில் நடந்தவற்றை திமுக மீது குற்றமில்லை 20க்கும் மேற்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை .  ஆளுநர் தெளிவாக இருக்கிறார் தமிழ்நாட்டில் கலவர பூமியாக ஆக்க வேண்டும் நிம்மதி இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

 தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சம்பவங்களுக்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் போதாது . தவறான குற்றவாளிகளை அந்த வழக்கில் கொண்டு போகவும் கூடாது. தீவிரமாக  விசாரித்து உண்மையான குற்றவாளிகளை மக்கள் மத்தியில் கொண்டு வர வேண்டும்.  இது ஒரு சிக்கலான வழக்கு என்பதால் தாமதமாகும் என்று தெரிவித்திருக்கிறார்.