இடைத்தேர்தல் ஒரு சாக்கடை என்று சொன்னது ஏன்? ஈவிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்

 
eவ்

இடைத்தேர்தலை சாக்கடை என்று விமர்சித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இப்போது ஏன் அதே சாக்கடையில் இறங்குகிறார் என்ற கேள்வியை எழுப்பி இருந்தா டிடிவி தினகரன்.  அதே கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடந்த 28ம் தேதி அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு,  இடைத்தேர்தல் என்றால் சாக்கடை என்று முன்பு சொல்லி இருந்தார் இளங்கோவன்.  அவரே இப்போது அதே சாக்கடையில் ஏன் இறங்கி இருக்கிறார் என்ற கேள்வியை எழுப்பினார்.  மேலும்,  இளங்கோவன் ஒன்றும் வெல்ல முடியாத வேட்பாளர் அல்ல.  2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனியில் அவர் தோல்வி அடைந்திருக்கிறார் என்றார் தினகரன்.

எவ்

இடைத்தேர்தலை சாக்கடை என்று கடுமையாக விமர்சித்துவிட்டு அந்த சாக்கடையில் ஏன் இறங்க வேண்டும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனால், இளங்கோவன் ஏன் இடைத்தேர்தலை சாக்கடை என்று சொன்னா?  எப்போது சொன்னார்? எதற்காக சொன்னார்? என்ற சலசலப்புகள் இருந்த வந்தன.

இந்த நிலையில், அந்த சலசலப்புகளுக்கு அவர் நேர்காணல் ஒன்றில் விளக்கம் அளித்திருக்கிறார்.

அவர்,  ‘’அது வெட்டியும் ஒட்டியும் செய்யப்பட்ட செயல்.  அதுமட்டுமல்ல, தமிழகத்தை பொறுத்தவரையிலும் 67க்கு பின்னர் கூட்டணி அரசுகள்தான் தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கின்றன. 67க்கு பின்னர் ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் ஒவ்வொரு கூட்டணி வருகிறது.  ஆகவே, அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப கருத்துக்களை சொல்லி இருக்கலாம்.  அதை அந்த சூழ்நிலைக்கு ஏற்ற கருத்தாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர,  இப்போது அதை ஒலிபரப்புவதோ, வாட்சப்பில் பரப்புவதோ நாகரீமான விசயம் கிடையாது’’என்று கூறியிருக்கிறார்.