திமுகவுக்கு ஏன் இவ்வளவு பயம்? முதல்வரை எது பயமுறுத்துகிறது? - குஷ்பு ஆவேசம்

 
k

முதல்வருக்கு ஏன் இவ்வளவு பயம்? நிச்சயம் மன்னிப்பு  கேட்க வேண்டியது வரும். பட்டால்தான் புரியும் என்கிறார் பாஜக நிர்வாகி குஷ்பூ.

 ஆர். எஸ். எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.   ஆனால் இந்த உத்தரவை போலீசார் அமல் படுத்தவில்லை என சொல்லி ஆ.ர் எஸ். எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைநீதிபதி,   சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் பேரணியை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

s

 இந்த உத்தரவை எதிர்த்து ஆர். எஸ். எஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில்  மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.   இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆர். எஸ். எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.   இதை அடுத்து  பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அளித்த விண்ணப்பத்தினை ஏற்று மார்ச் 5ம் தேதி பேரணி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு ஆர். எஸ். எஸ்  வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

ஆனால்,   தமிழக அரசு சார்பில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 

 ஆர். எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்தால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.  தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.   இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது .

இது குறித்து பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில்,   ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் கூட தமிழக அரசு  அதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது.   உச்ச நீதிமன்றமே அனுமதியே வழங்கும்.  அதற்கான பாடத்தை திமுக கற்க வேண்டிய நிலை ஏற்படும். மீண்டும் மன்னிப்பு கேட்க தயாராக இருங்கள் என்று கூறியிருக்கிறார்.   மேலும் ,  ஆர். எஸ். எஸ்- ஐ பார்த்து திமுகவுக்கு பயமா?  பட்டால் தான் புரியும்.  முதல்வர் ஸ்டாலின் அவர்களே எது உங்களை பயமுறுத்துகிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.