ரொம்ப கஷ்டமா இருந்தா விசம் குடிச்சு செத்துப்போ..கடுப்பான சீமான்

 

ரொம்ப கஷ்டமா இருந்தா விசம் குடிச்சு செத்துப்போ..கடுப்பான சீமான்

பூலித்தேவன், தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் மற்றும் கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதா ஆகியோருக்கு சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சீமான். அப்போது, யாரும் செய்யாததையா செய்துவிட்டார் ராகவன். அவரின் அனுமதி இல்லாமல் அந்தரங்கத்தை வீடியோ எடுத்தது தவறு சொன்னதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தங்களை கடுமையாக விமர்சித்து வருகிறாரே என்ற கேள்விக்கு,

ரொம்ப கஷ்டமா இருந்தா விசம் குடிச்சு செத்துப்போ..கடுப்பான சீமான்

’’வளர்ந்து வருகிற ஒருவனை வீழ்த்துவருவதற்கு கடைசி ஆயுதம்தான் இந்த கருவி. காங்கிரசில் இத்தனை தலைவர்கள் இருக்கும் போது வலுக்கட்டாயமாக ஜோதிமணி பேசுகிறார். கே.டி.ராகவன் மீது வழக்கு போடுங்கள் என்று உங்க முதல்வர் ஸ்டாலினிடம் கேட்க வேண்டும் ஜோதிமணி. என்கிட்ட பேசக்கூடாது. நீங்க எனக்கு திட்டி கடிதம் எழுகிறீர்கள். ஆனால், ராகவனை திட்டி கடிதம் எழுதவில்லையே. ஏன் எழுதவில்லை. அவுங்களுக்கு ராகவன் அல்ல பிரச்சனை. அந்த காணொளி அல்ல பிரச்சனை. சீமான் பிரச்சனை. ஒருத்தன் நெஞ்சுல அடிச்சு அழுவுறான். சீமானுக்கு 30 லட்சம் பேர் ஓட்டு போட்டுட்டாங்களே என்று. 50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டு நாசமாக்குன கட்சிக்கு இன்னமும் ஓட்டு போட்டுக்கிட்டு இருக்கான். என்னைய பிஜேபியின் பி டீன் என்கிறாய். ரொம்ப கஷ்டமா இருந்தா வெசம் குடிச்சு செத்துப்போ.

ரொம்ப கஷ்டமா இருந்தா விசம் குடிச்சு செத்துப்போ..கடுப்பான சீமான்

அதிர்ச்சி அடைஞ்சுட்டேன். இதையெல்லாம் என்னால தாங்க முடியலன்னு சொல்லுறதுக்கு, ஒருதம்பி எழுதியிருக்கான்… பக்ரீத்துக்கு 300 ரூபா சேர்த்து வச்சிருக்கேன். அத அனுப்புறேன் செத்துப்போறியா?ன்னு சொல்லியிருக்கான். அதத்தான் சொல்ல வேண்டியதிருக்கு. அவ்வளவு வயிற்றெரிச்சல் அவ்வளவு காழ்ப்புணர்ச்சி என்று சொல்லிவிட்டு சிரித்த சீமான் பின்னர் ஆவேசமாகி,

ரொம்ப கஷ்டமா இருந்தா விசம் குடிச்சு செத்துப்போ..கடுப்பான சீமான்

’’ஒரு தேசிய இனத்தின்பிள்ளைகள், அழிந்துவிட்ட வீழ்ந்துவிட்ட இனத்தின் பிள்ளைகள் கண்ணுமுன்னாடி பல லட்சம் மக்களை சாகக்கொடுத்தோம். பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் சுரண்டல், பாலியல் கொடுமை பற்றி பேசும் பெருந்தகைகள் குறிப்பாக தங்கை ஜோதிமணி போன்றவர்கள் உங்கள் கட்சியின் தலைவர் அனுப்பின ராணுவம் பல்லாயிரக்கணக்கான அக்கா, தங்கைகளை, உன்னைப்போன்ற தங்கைகளை வன்புணர்ச்சி செய்து கொலை செய்தார்கள்.

ரொம்ப கஷ்டமா இருந்தா விசம் குடிச்சு செத்துப்போ..கடுப்பான சீமான்

அதெல்லாம் பாலியல் கொடுமை இல்லையா? வன்புணர்ச்சி இல்லையா? ஆயுதங்களை வைத்தே புணர்ந்தது. நீங்கள் காசு கொட்டி கொடுத்து பயிற்சி கொடுத்து ஆயுதங்கள் கொடுத்த ராணுவம் என் அக்கா தங்கைகளை கதற கதற கொலை செய்தது. அதைப்பற்றியெல்லாம் நீங்க ஒரு வார்த்தை பேசல.. கண்டிக்கல. இவர்களுக்கு கண்ணுல தூசியா நான் உறுத்திக்கிட்டே இருக்கேன். படுக்கும்போது என்னைய திட்டி ஒரு பதிவு. எழுந்திருச்சதும் ஒரு பதிவு. சரி, வேர்க்காமல் விளையாட முடியாது. விமர்சனம் இல்லாமல் வளர முடியாது. நல்லா விமர்சியுங்கள்’’என்றார்.