செங்கோலுன்னு சொன்னாலே ஓங்கோலுக்கு எரியுதே ஏன்? விளாசும் கஸ்தூரி

 
s

தமிழர்களின் தனிப்பட்ட அடையாளம் கிடையாது செங்கோல்.  அது எல்லா நாடுகளிலும் உள்ளது என்கிறார் நடிகை கஸ்தூரி.  அவர் மேலும்,  ஜனநாயகத்தில் மன்னர் ஆட்சியின் சின்னம் எதற்கு? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

l

 புதிதாக கட்டப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார் . இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் திருவாவடுதுறை செங்கோல் வைக்கப்பட இருக்கிறது.   இந்த செங்கோல் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.  இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முழு விளக்கம் அளித்திருக்கிறார்.

செங்கோல் மதத்தின் அடையாளம் அல்ல.  தர்மத்தின் அடையாளமாக செங்கோலில் நந்தி உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.  செங்கோல் என்பது ஒரு மதத்தை மட்டும் சார்ந்தது என சொல்வது முற்றிலும் தவறு.  அனைவருக்கும் பொதுவானது.  இந்திய பூமி சமயங்களுக்கு அப்பாற்பட்டது . இங்குதான் பௌத்தம் உள்ளிட்ட மதங்கள் தோன்றின என்கிறார் தர்மபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சாமிகள்.

k

 இந்நிலையில் நடிகை கஸ்தூரி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’செங்கோலுன்னு சொன்னாலே ஓங்கோலுக்கு எரியுதே ஏன் ?’’ என்று கேட்கிறார்.  மேலும்,  ’’உயிர் போகும் பிரச்சினைய விட்டுபுட்டு இந்த புண்ணாக்கை   விவாதிச்சுட்டு இருக்கோம். ஒரு வேளை அதான் task ஓ?  என்னை கேட்டா செங்கோலோ பேனாவோ,  எல்லாமே அரசியல்வாதிகளின் தனிப்பட்ட தம்பட்டம். மக்களுக்கு இதெல்லாமே தேவையில்லாத ஆணிதான்’’என்று விளாசி இருக்கிறார்.

அவர் மேலும் இதுகுறித்து,  ‘’செங்கோல் உலகம் முழுக்க உண்டு.  ஆங்கிலேயர், ஆப்பிரிக்கர், ஆரியர், எல்லா மன்னரும் பயன்படுத்தினார்கள். தமிழரின் பிரத்தியேக அடையாளம்   இல்லை. அப்புறம் ஜனநாயகத்தில் மன்னராட்சி சின்னம் எதற்கு?’’ என்று கேட்கிறார்.

கஸ்தூரியின் இந்த கருத்துக்கு திமுகவினர் கொதித்தெழுந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.