ஓபிஎஸ்சை சந்தித்தது ஏன்? ஜெ.தீபா விளக்கம்

 
dee

பன்னீர்செல்வத்திற்கும் பழனிச்சாமிக்குமான மோதல் ஈரோடு இடைத்தேர்தலில் உச்சகட்டத்திற்கு வந்திருக்கும் நிலையில் அதிமுக சின்னம் முடக்கப்படும் நிலை இருக்கிறது என்று பேசப்பட்டு வரும் நிலையில் ஓபிஎஸ்ஐ திடீரென்று சந்தித்தது அரசியல் காரணத்திற்காக அல்ல என்று தெரிவித்திருக்கிறார் ஜெ. தீபா.

ஈரோடு  கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி,  இபிஎஸ் அணி என இரண்டு அணிகளுமே போட்டியிடுகின்றன.   எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளரை அறிவித்திருக்கிறார்.   பன்னீர்செல்வமும் வேட்பாளரை  அறிவித்திருக்கிறார்.  இதனால் அதிமுகவில் சின்னம் முடக்கப்படும் என்று எச்சரிக்கை தெரிவித்திருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

t

 இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ . தீபா பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசி உள்ளார்.  இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  இடைத்தேர்தலில் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளீர்களா? என்ற கேள்விக்கு,  ஓபிஎஸ்ஐ அரசியல் தொடர்பாக சந்திக்கவில்லை.   குடும்ப நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுப்பது சம்பந்தமாக அவரை சந்தித்தேன் என்று கூறியுள்ளார்.

 அதன் பின்னர் சசிகலா மீது  எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு,  சசிகலா மீது நான் சொன்ன குற்றச்சாட்டுகளில் எந்த மாற்றமும் இல்லை.  நான் சொன்னது எல்லாம் உண்மைகள்.  மேற்கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன என்று கூறி இருக்கிறார்.