திருமாவளவனுக்கு எதற்கு எழுச்சித்தமிழர் பட்டம்?நாதக

 
t

திருமாவளவனுக்கு எதற்கு எழுச்சித்தமிழர் பட்டம்? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்.  

i

நமக்கு இருக்கின்ற அடையாளம் தமிழன் என்கிற அடையாளம் இல்லை, இனம் என்கிற அடையாளம் இல்லை,  மொழி என்கிற அடையாளம் இல்லை,  ஜனநாயகம் என்பதுதான் நமது அடையாளம் என்று பேசியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். 

திருமாவை அவரது கட்சியினர் எழுச்சித்தமிழர் என்று அழைத்து வருகின்றனர்.   இதனால் எழுச்சித் தமிழர் என்று திருமாவளவனை அழைத்து வரும் நிலையில் திருமாவளவன் இவ்வாறு பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்,   தமிழ்மொழி நமது அடையாளமில்லை; சனநாயகம்தான் நமது அடையாளம் எனும் அண்ணன் திருமாவளவன் அவர்கள், 'எழுச்சித்தமிழர்' எனும் அடைமொழியைத் துறந்து, 'எழுச்சிமிகு சனநாயகவாதி' எனப் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளலாமே? அடையாளம் இல்லையெனும்போது, எதற்கு எழுச்சித்தமிழர் பட்டம்? என்று கேட்கிறார்.